கணித பாட அடைவு மட்டத்தை
மேம்படுத்த திட்டம்
கல்விப்
பொது சாதாரண தர பரீட்சையில் கணித
பாட அடைவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளில் கணித பாட கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொடர் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 முதல்
11 வகுப்பு வரையான மாணவர்களின் கணித பாட வளர்ச்சி மட்டத்தை அதிகரித்தல் மற்றும் 1-5 மற்றும் 6-11 வகுப்புகளுக்கான கணித ஆசிரியர்களின் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்பிரகாரம்
1-5 மற்றும் 6-9 வகுப்பு மாணவர்களுக்காக இலகுவாக கணித பாடம் பயிலுவதற்கு ஏற்ற புத்தகங்களை கற்றல் நடவடிக்கைகளுக்கு உபயோகித்தல் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாக கொண்ட கற்றல் நடவடிக்கைகளை கொண்ட திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 11 வகுப்பு மாணவர்களுக்காக கணித பாட கற்றல் நடவடிக்கைக்கு விசேட திட்டங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை
மட்டத்தில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படும் முறைமை தொடர்பாக பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வை செய்யப்படும். இதற்கு மேலதிகமாக வலய மற்றும் மாகாண மட்டத்திலான வெளிவாரி கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டங்களில் ஊடாக முன்னெடுக்கப்படும்.
இந்த
வேலைத்திட்டத்தின் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் ஒன்பது வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கல்வி
அமைச்சின் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
0 comments:
Post a Comment