இலங்கை மத்திய வங்கியில் இருந்து
விழுந்து உயிரிழந்த சிறுவன்
தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து சிறுவர்
ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற
நிலையில் 6வது மாடியில் இருந்து விழுந்தமையினால் அவரது
உடல் சிதறிய நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்து இலங்கை மத்திய வங்கி
கட்டடத்தில் இருந்து 12அடி தூரததிற்கு சடலம் சிதறிய நிலையில், சடலத்தின் பகுதிகள் ஜனாதிபதி மாவத்தையில் விழுந்து
கிடந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.
மாலபே, கஹன்தோட்டை, வெஹேரகல
பிரதேசத்தில் வசிக்கும் நிதுக் குடாகமகே என்ற 16 வயதுடைய சிறுவனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மத்திய வங்கியின் உயர் அதிகாரியான தனது தந்தையை சந்திக்க
நேற்று காலை 11.30 மணியளவில் அங்கு வந்த சிறுவன் 15 மாடிக்கு சென்றுள்ளார்.
பின்னர் தந்தையுடன் அரை மணித்தியாலம் வரை சிறுவன்
பேசியுள்ளார். தந்தை 2 மணியளவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக
சென்றுள்ளார்.
இதன் போதே சிறுவன் கீழே குதித்துள்ளார். குதிப்பதற்கு
முன்னர் ‘Sorry’ என குறுந்தகவல் ஒன்றை தந்தைக்கு
அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
எனினும் அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கான உறுதியான காரணம்
இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment