இரட்டையர்
ஒற்றுமை மகாநாடு
-
இலங்கையில் நடைபெற ஏற்பாடு
28
ஆயிரம் இரட்டையர்கள்
அங்கத்தவர்களாக
உள்ளதாகத் தெரிவிப்பு
உலகின் பாரிய இரட்டையர் ஒற்றுமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி
மாத்தில் உலக கிண்ணஸ் புத்தகத்தில் சாதனை பதிவு செய்வதற்கு இலங்கை இரட்டையர்
அமைப்பு எதிர்பார்த்துள்ளது.
இது இலங்கை ருவின்ஸ் Sri Lanka twins என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுகததாச உள்ளக
விளையாட்டு அரசங்கில் நடைபெறவுள்ள இலங்கை இரட்டையர் ஒற்றுமை சம்மேளனத்தில் இந்த
சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.
இலங்கை இரட்டையர் ஒற்றுமை அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான
திருமதி உபுலி கமகே இரட்டையர் ஒற்றுமை சம்மேளனத்திற்கான அழைப்பிதழை பிரதமர் மஹிந்த
ராஜபக்ஸவிடம் கையளித்தார்.
இது தொடர்பான நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று (26)
இடம்பெற்றது. இந்த அமைப்பில் 24 மாவட்டங்கைச் சேர்ந்த 28 ஆயிரம் இரட்டையர்கள்
அங்கத்தவர்களாக உள்ளனர்.
0 comments:
Post a Comment