80 வயதானவர் மத்திய வங்கியின் ஆளுநரா?
முன்னாள் அமைச்சர் மங்கள கேள்வி
பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் ஒரு பல்கலைக்கழக
கல்வியியலாளராக இருக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர
தெரிவித்துள்ளார்.
எனினும், சுமார் 80 வயதை அண்மித்த
ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமா என மங்கள சமரவீர கேள்வி
எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநராக பேராசிரியர் லக்ஷ்மன்
நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர
செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர்
டபிள்யூ.டி.லக்ஷமன் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தைப்
பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prof. WD Lakshman - a university academic maybe but a near octogenarian as Governor for #Centralbank....?!?! A proxy for the Rajapakse mafia to continue with their ‘old ways’? (Await the tabling of the CBSL forensic reports in Parliament in January)
0 comments:
Post a Comment