சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள்
பெற்றுக் கொண்ட கடன்கள்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அனைத்து வங்கி தலைவர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய 300 மில்லியன் வரையான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பணத்தை மீளப்பெருவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரி சீர்திருத்த முயற்சிகளுக்கமைய மத்திய வங்கி உட்பட அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரி சலுகைகளிலிருந்து கிடைக்கும் இலாபத்தை வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதுப்பிக்க பயன்படுத்த முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top