சுனாமியும் இன நல்லுறவும்
2004.12.26ம் திகதி
இலங்கை மக்களைத்
தாக்கிய சுனாமி
இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கவும்
உதவியது.
சுனாமியின் பின்னரான
மீட்பு நடவடிக்கைகள்,
நிவாரண நடவடிக்கைகள்,
இடைத்தங்கல் முகாம்கள் அமைத்தல், புனர்வாழ்வு போன்ற
பல் வேறு
வேலைத்திட்டங்களில் மக்கள் இன
மத வேறுபாடின்றி
செயற்பட்டார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில்
இனங்களுக்கிடையிலும் இனங்களுக்குள்ளும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப பல வேலைத்திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டன. இதன்பயனாக "அம்பாரை
மாவட்ட சர்வ
சமய சம்மேளனம்"
மற்றும் "சமாதானத்திற்கான சமயங்களின்
இலங்கைப் பேரவை"
போன்றவை சிறப்பாக
இயங்கி பௌத்த,ஹிந்து,இஸ்லாம்,கிருஸ்தவ சமய
மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தின. அதே வேளை
முஸ்லிம் சமூகத்திற்குள்
காணப்படும் சில குறைபாடுகளை நீக்கவும் பல
வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அவற்றுள்
ஒன்று இன
நல்லுறவுக்கு மதரசா கல்வியில் முக்கியத்துவம் கொடுத்தல்
அடுத்தது குத்பா
பிரசங்கங்களில் இன நல்லுறவையும் நற் பண்புகளையும்
வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தல். இவை மூலம்
மக்களின் தனிப்பட்ட
அல்லது சமய
ரீதியான செயற்பாடுகள்
ஏனைய சமூகத்தினருக்கு
இடையூறு விளைவிக்காமல்
சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை வலுவூட்டும்
என எதிர்பார்க்கப்பட்டது.
தற்காலத்தில் இன
நல்லுறவின் தேவை பல மடங்கு அதிகமாக
உள்ளது.
இதற்காக கடந்த
ஜனாதிபதித் தேர்தலின் பின் பலரும் சமூகங்கள்
தம்மை சுயவிசாரணை
செய்து கொள்ள
வேண்டும் எனப்
பதிவுகள் இட்டனர்.
ஆயினும் மக்களின்
பண்புகளில் இன்னும் மாற்றம் வரவில்லை. சமூகத்
தலைவர்களிடையே புரிந்துணர்வு இல்லை. பள்ளி வாசல்களில்
ஐ வேளைத்
தொழுகைக்கும் அதி கூடிய சப்தத்துடன் ஒலி
பெருக்கி பாவனை,
வாகனப் போக்கு
வரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகள்
தொடர்கின்றன. இவற்றை நாங்களே கட்டுப்படுத்தாவிட்டால் நமது உரிமைகள் சலுகைகளை இழக்க
நேரிடும்.
Dr.M.I.M.ஜெமீல்
சாய்ந்தமருது.
0 comments:
Post a Comment