'பிரபலமான டீனேஜ்ஜர் மலாலா':
ஐ.நா., கெளரவம்



கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக(டீனேஜ்ஜர்) பாக்கிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்பை தேர்வு செய்து, ஐ.நா.,கெளரவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் தொடக்கம்(2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள்(2012), எபோலா வைரஸ் தாக்குதல்(2014), பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது(2015) ஆகியவற்றை ஐ.நா., குறிப்பிட்டுள்ளது.

மலாலா பற்றி குறிப்பிட்டுள்ள ஐ.நா., '2012ல் பெண்களின் கல்வியில் மும்முரம் காட்டிய மலாலா யூசப்பை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அவர் மீதான் தாக்குதல் உலகை உலுக்கியது. மலாலா நலம் பெற உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன. யுனெஸ்கோவின் பாரிஸ் தலைமையகத்திலும் அவருக்கு பிரார்த்தனை நடந்தது. அவர் உயிர்பிழைத்து மீண்டு வந்து, பெண் கல்வி மீதான தனது செயலில் வேகமெடுத்தார்.

2014ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு ஐ.நா., அமைதிக்கான தூதரானார். அவரது அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக அவரை உருவாக்கி உள்ளது.' இவ்வாறு ஐ.நா., கூறியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top