இடை நிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்திட்ட
உதவியாளர்களின் எதிர்கால நிலை தொடர்பில்
அமைச்சரவையில் எடுத்துரைப்பேன்
– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி
பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு கடற்றொழலில் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று முன்தினம் (14.12.2019) பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் பிரதிநிதிகளை அமைச்சர் சந்தித்தார். இச் சந்திப்பின் போதே அமைச்சர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களுக்கு குறித்த உறுதியை வழங்கியுள்ளார்.
கடந்த கால ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஜனாதிபதி தேர்தலுதக்கான திகதி அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில் வடக்கு கிழக்கை சேர்ந்த சுமார் 2500 பேர் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் 7500 பேர் பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும், குறித்த நியமனங்கள் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்த அனைத்து நியமனங்களும் இடை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமையினால் தாம் நிர்க்கதி நிலையில் இருப்பதாக குறித்த பிரதிநிதிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் குறித்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எடுத்துரைத்து சிறந்த தீர்வினை பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.