முன்னாள் பிரதமர் ரணில் குன்னூர் 'விசிட்
படகு சவாரி செய்ய முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பினார்.
முன்னாள்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க இந்தியாவிலுள்ள நீலகிரி மாவட்டம்
ஊட்டியில் கடகே
குன்னுாரில் படகு சவாரி செய்ய முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பினார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் கடந்த நான்கு நாட்களாக ஊட்டியில் ஓய்வெடுத்து வருகிறார். குன்னூர்
சிம்ஸ் பூங்காவுக்கு
நேற்றுஅவர் சென்றுள்ளார். அவரை
வரவேற்ற தோட்டக்கலை
துறையினர் பூங்காவை
சுற்றி காண்பித்தனர்.
பூங்காவில்
நூற்றாண்டு பழமை வாய்ந்த அரிகேரியா; போஜ்பத்தர்;
ருத்ராட்சம் உட்பட 60க்கும் மேற்பட்ட அரிய
மரங்களின் விவரங்கள்,
பூங்காவின் வரலாறு குறித்து விக்ரமசிங்கேவிடம் தோட்டக்கலை துறையினர் விளக்கம் அளித்தனர்.
குன்னுாரில்
நேற்று கடும்
மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் பூங்கா
ஏரியில் ரணில்
விக்ரமசிங்க படகு சவாரி
செய்ய முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதேபோல்
குன்னுார் அருகே
உள்ள லேம்ஸ்ராக்,
டால்பின்நோஸ் சுற்றுலாப்பகுதிகளை பார்வையிடாமல்
ஊட்டி திரும்பினார் என அந்தச் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது..
0 comments:
Post a Comment