இஸ்லாமிய பயங்கரவாதத்தை
நாம் நிறுத்தாவிட்டால் அது பிராந்தியத்திற்கு
பெரும் அச்சுறுத்தலாகும்
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ



இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க புலனாய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் மாத்திரமே முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எல்.ரி.ரி. அமைப்புக்கு எதிரான யுத்தத்தின் போது தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்ட போதிலும் தற்பொழுது ஏற்பட்டுள்ள புதிய பயங்கரவாதம் தொடர்பில்  முக்கியமான தேவை புலனாய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே ஆகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி மேற்கொண்ட தாக்குதலின் போது அனைத்து பயங்கரவாதிகளும் இலங்கையர் என்று தெரிவித்த பிரதமர் இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் வரையிறுக்கப்பட்ட அச்சுறுத்தல் அல்ல என்றும் குறிப்பிட்டார். பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் மேம்பாட்டுக்காக இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயங்களை குறிப்பிட்டார். 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பங்கு கொள்ளவில்லை. ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரி தாக்குதலில் கலந்து கொண்ட அனைவரும் இலங்கையர்கள். இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுக்கு இந்த அச்சுறுத்தல் இருப்பதனால் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த வருடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தமை தொடர்பான தகவல்களின் காரணமாக இந்தியா முழுவதும் பாதுகாப்பு படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். எமக்கும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மாத்திரமன்றி மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும், இதன் காரணமாக இந்த புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்.

இலங்கை பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு கிடைத்த அழைப்பை நான் பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பிரதமராக நியமிக்கப்பட்டு, இலங்கை இராணுவ படை உறுப்பினர்களை உத்தியோகபூர்வ ரீதியில் சந்திப்பதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 10 வருடங்களில் எல்.ரி.ரி, பயங்கரவாதத்தை தோற்கடித்து இலங்கையின் ஆயுத படைக்கு கிடைத்த உன்னதமான வெற்றியின் போது உங்களது படை தளபதி என்ற ரீதியில் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையை நான் எனது வாழ்நாளில் கிடைத்த உன்னதமான வரப்பிரசாதமாகவே கருதுகின்றேன்.

உங்களுக்கு கிடைத்த வெற்றியின் பெருமை தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேசத்தில் மேலும் பல தசாப்த காலம் வரையில் நிலைத்திருக்கும் என்பது உறுதி. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் முழு உலகமும் இருந்த சந்தர்ப்பத்தில் தான் நாம் இந்த வெற்றியை பெற்றோம். இதன் காரணமாக இது இலங்கைக்கு கிடைத்த வெற்றி மாத்திரமல்ல முழு உலகிற்கும் வெளிச்சத்தையும், புதிய எதிர்பார்ப்பையும் தேடித்தரும் விடயமாக அமைந்தது. அமெரிக்காவில் எவ்.பி. நிறுவனத்தினால் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எல்.ரி.ரி. அமைப்பு உலகில் வலுவானதும் முக்கிய பயங்கரவாத அமைப்பாகவும் உத்தியோகபூர்வ ரீதியில் பெயரிப்பட்டது. அமெரிக்காவிற்கு எல்.ரி.ரி. அமைப்பினால் நேரடியாக அச்சுறுத்தல் இல்லாத போதிலும் அவர்கள் இதனை உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாக கருதினர்.

இவர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அல்கைதா அமைப்பு கூட அமெரிக்காவினால் பட்டியல் இடப்பட்டிருந்தது. ஏல்.ரி.ரி. அமைப்பிலும் பார்க்க மிகவும் குறைந்த மட்டத்தில் இந்த அமைப்பு இருந்தது. இதனால் நாம் அன்று எத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொண்டோம் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் நாம் இந்த பயங்கரவாத அமைப்பை திட்டவட்டமாக தோற்கடித்தோம். நாம் இந்த வெற்றியை பெற்றுக்கொள்ளும் வரையில் சிலர் இதனை செய்ய முடியாது என்று கூறினர். அந்த காலப்பகுதியில் நான் சந்தித்த முக்கிய பிரபுக்கள் பலர் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஆலோசனை என்னவெனில் செய்யமுடியாதவற்ற முயற்சிக்க வேண்டாம் என்பதாகும். நாம் இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் மன வலிமை இல்லாமலும் அவதானம் செலுத்தாமலும் எந்வொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும். 2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட விடயத்திற்கு நான் நன்கு அறிந்திருந்த பொருத்தமான நபரை பாதுகாப்பு செயலாளராக நியமித்தேன். அவரின் சிபாரிசின் அடிப்டையில் ஏனைய பொருத்தமான அதிகாரிகளை ஏனைய பொருத்தமான பதவிகளுக்கு நியமித்து யுத்தத்தை வெற்றி கொள்ளும் ஆயுத படை இராணுவ பொறிமுறையை கட்டியெழுப்பினேன்.

இன்று அதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உங்களது ஜனாதிபதி மற்றும் படைத்தளபதி என்ற ரீதியில் பொது மக்களினால் அமோக வெற்றி ஆணையினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாம் மீண்டும் ஒரு மறை இந்த நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றமை எமது நாட்டின் தேசிய இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்திலே ஆகும். எல்.ரி.ரி, அமைப்பிற்கு எதிராக கிடைத்த வெற்றியின் 10 வருட நிறைவை கொண்டாட இருந்த சில தினங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினால் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறிய தீவாகும். இருப்பினும் இங்கு எதுவும் சிறிய அளவில் இடம்பெறுவதில்லை.

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கை போன்று தெற்கில் ஆயுத கிழர்ச்சியினால் நாம் உலகின் மிக மேசமான மோதல்களைக் கொண்ட பூமியாக அடையாளப்படுத்தப்பட்டோம். இதன் பின்னர் தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்த உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு நாட்டில் இருந்தது. ஆசியாவில் சிவில் மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாரிய மற்றும் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இந்த வருடத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற சம்பவமாகும். நாடு சிறியதாயினும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால் சிறியதல்ல.

கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டின் புலனாய்வு பிரிவு சீர்குலைந்துள்ளது. நிர்வாகத்தில் இருந்த அரசாங்கம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பகடை காய்களாக மாற்றினர். தொல்லைகளை ஏற்படுத்தி போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையை புலனாய்வு பிரிவு மாத்திரம் எதிர்கொள்ளவில்லை. எல்.ரி.ரி. அமைப்பிற்கு எதிராக யுத்தம் செய்த ஆயுத படை உயர் தரத்தில் இவ்வாறான இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஊடகங்கள் மூலம் பாரிய அளவில் முக்கியத்துவம் வழங்கி இந்த பாதுகாப்பு பிரதானிகள் பொலிஸிற்கு வரவழைக்கப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டனர்.

இவ்வாறு யுத்த காலத்தில் இருந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு சபை முக்கியஸ்தர்கள் இருவர், இராணுவ தளபதிகள் இருவர், கடற்படைத்தளபதிகள் நால்வர், விமான படைத்தளபதிகள் இருவர், புலானய்வு பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவ பொலிஸ் விசேட படையணி, கடற்படை, ஆகியவற்றை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிரேஷ்ட அதிகாரிகள் இவ்வாறு இடையூறுகளுக்கும் சிரமங்களுக்கும் உள்ளானார்கள். இதில் சிலர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சில வாரம் தொடக்கம் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் நோக்கம் எமது படை வீரர்கள் அல்ல. திருடர்கள் மற்றும் கொலையாளிகள் என்ற கருத்தில் இலங்கையர்களைப் போன்று வெளிநாட்டவர்கள் மனதிலும் இவர்கள் தொடர்பில் அவமான பெயரை எற்படுத்தினர். உலகில் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் இவ்வாறு தமது தமது படைகளை குறைத்து மதித்ததில்லை. ஆயுத படை என்பது தேசிய பாதுகாப்பாகும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் மாறிய பின்னர் நாட்டில் ஏற்பட்ட வெளிநாட்டு எதிரிகளின் சக்தியினால் இலங்கை ஆக்கிரமிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஆயுத படையை வேட்டையாடி அவர்களது உயிரிற்கும் அச்சுறுத்தல் எற்படுத்தினர்.

மகா சங்கத்தினரை அடிமைப்படுத்தி இந்த நாட்டின் பெரும்பாண்மை சமூகத்தை மிதித்து 4 தசாப்த காலம் நிலவிய சிவில் யுத்தத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்ததை நாம் கடந்த 5 வருட காலப்பகுதியில் காணக்கூடியதாக இருந்தது. கடந்த அரசாங்கம் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் முன்னால் சென்று வெளிநாட்டு நீதிபதிகளையும் முக்கியஸ்தர்களையும் கொண்ட எமது இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக இராணுவ குற்றச்சாட்டு நீதி மன்றம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கைக்கு எதிராக பிரேரணையை நிறைவேற்றுவதை நாம் கண்டோம். இதனை செய்தது இலங்கையிலேயே மக்களினால் அதிகாரத்திற்கு அமர்த்தப்பட்ட அரசாங்கமாகும். இன்று கடந்த 5 வருட காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை சரி செய்வதற்காக பாரிய மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி ஒருவரை இந்த நாட்டு மக்கள் நியமித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top