இலங்கையில் வானொலி
 சேவை ஆரம்பிக்கப்பட்டு           
94 வருடங்கள் பூர்த்தி!



இலங்கையில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் 94 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பிரித்தானிய ஆளுநர் ஹியு கிளிபர்ட் தலைமையில் 1925ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி இலங்கையில் வானொலி சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவந்த வானொலி சேவை 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ரேடியோ சிலோன் என்ற பெயரில் புதிய திணைக்களமாக பரிணாமம் அடைந்தது. ஜோன் லெம்ஸன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதான பணிப்பாளராவார். 1967ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி இலங்கை வானொலி திணைக்களம் கூட்டுத்தாபனமாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அதன் முதலாவது தலைவராகவும், பணிப்பாளராகவும் நெவில் டி ஜயவீர செயற்பட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது வரை தேசிய ரீதியில் மூன்று சிங்கள சேவைகளையும், இரண்டு தமிழ் சேவைகளையும் மற்றும் ஆங்கில சேவையையும் ஒலிபரப்பி வருகிறது.

ஐந்து வெளிநாட்டுச் சேவைகளும் இடம்பெறுகின்றன. ரஜரட்ட, ருஹூனு, மலையக, வயம்ப ஹற்றன் , யாழ்ப்பாணம், ஊவா ஆகிய இடங்களில் வானொலி மற்றும் பிறை எப்.எம் ஆகியன ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவைகளாக காணப்படுகின்றன. தெற்காசியாவில் முதல் வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆசியாவின் பிரதான இசைத்தட்டு களஞ்சியசாலை இன்றும் காணப்படுவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் ஆகும்.

உலக பிரசித்திபெற்ற பல மக்கள் தலைவர்களின் குரல்பதிவுகளும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் காணப்படுகின்றது. சிங்கள வர்த்தக சேவை, சிற்றி எப்.எம், தென்றல், தமிழ் தேசிய சேவை ஆகியவற்றை இணைத்தளத்தின் ஊடாகவும் செவிமடுப்பதற்கான வசதிகளும் காணப்படுகின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top