உயர்தர பரீட்சை சான்றிதழை
 எதிர்வரும் 30 ஆம் திகதி முதல்
பெற்றுக்கொள்ள முடியும்



இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தப்பணிகள்( Recorrection )  எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிய முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் 0112-78-42-08 அல்லது 0112-78-45-37 என்பதாகும். இதற்கு மேலதிகமாக 0113-186-350 அல்லது 0113-14-03-14 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு இவற்றைக் கேட்டறிய முடியும்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு .பொ. உயர்தரப் பரீட்சைக்கான சான்றிதழை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ள முடியும். இன்றுமுதல் ஒன்லைன் முறையின் கீழ், இதற்கு விண்ணப்பிக்க முடியும். திணைக்களத்த்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk மூலம் சான்றிதழுக்கு விண்ணப்பித்து தபால் திணைக்களத்தின் ஸ்பீட் மெயில் சேவை ஊடாக 48 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும். .எம்.எஸ் சேவை ஊடாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது முகவரிக்கு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான மீளாய்வு விண்ணப்பப்பத்திரம் பெறுபேறுகளுடன் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தனியார் பரீட்சார்த்திகளுக்கு இதற்கான விண்ணப்பப்படிவம் தேசிய பத்திரிகைகளில் விளம்பரமாக அறிவிக்கப்பட உள்ளன.

இம்முறை உயர் தர பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையில் 2,678 மத்திய நிலையங்களில் நடைபெற்றது. பரீட்சையில் 337,704 பேர் தோற்றியுள்ளனர். இவர்களுள் 181,126 பேர் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பாடத்திட்டங்களில் 187,167 பேர் தோற்றியுள்ளனர். பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 3 பாடங்களுக்காக தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 94,609 ஆகும். பரீட்சை விதிமுறைகளை மீறிய 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top