கிறிஸ்தவ மத போதகரை கன்னத்தில் அடித்த
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்!
வைரலாகும் காணொளி
மத போதகர் ஒருவரை, மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பௌத்தர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவ மதத்தை போதித்தாக தெரிவித்தே குறித்த மத போதகரை அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த பகுதியில் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கு பொலிஸார் தவறியுள்ளதாகவும், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, அம்பிட்டிய சுமனரதனத் தேரர் கிறிஸ்தவ துறவி ஒருவரை வழிமறித்து தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்றும் நேற்று முன் தினம் பதிவாகியிருந்தது.
குறித்த கிறிஸ்தவ துறவி மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் குறித்த தேரர் மின்சார சபை ஊழியர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தார். அத்துடன், அரச உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்க முயற்சித்திருந்தார்.
அம்பிட்டிய சுமண ரத்ன தேரரின் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த காலங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன், தேரரின் இவ்வாறான நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தன.
இந்நிலையில், இன்றைய தினம் மத போதகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.