சாய்ந்தமருது நகர சபை கனவு நனவாக
ஜனாதிபதியின் கரங்கள் பலம் பெறுதல் வேண்டும்
சாய்ந்தமருதில் இராஜாங்க அமைச்சர்
விமலவீர
திசாநாயக்க தெரிவிப்பு
சாய்ந்தமருது
நகர சபை
இலக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டுமாயின்
எமது ஜனாதிபதியின்
கரங்கள் அவசியம்
பலம் பெறுதல்
வேண்டும் என
வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர
திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது
- மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல்
தலைவர் அல்ஹாஜ்.
வை.எம்.
ஹனீபா மற்றும் கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு
சார்பாக போடியிட்டு தெரிவு செய்யப்பட்ட
மாநகர சபை உறுப்பினர்களின் அழைப்பின் பெயரில்
சாய்ந்தமருது நகர சபை இலக்கை நோக்கிய
பயணம் தொடர்பாக
இன்று மக்கள்
சந்திப்பு இடம்பெற்ற
வேளை இதனை
தெரிவித்தார்.
இதில்
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப்
பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.
வை.எம்.
ஹனீபா தனது
கருத்தில் கடந்த
பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
தொடக்கம் இன்று
வரை சாய்ந்தமருது
உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில்
முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் பற்றி விளக்கமாக தெளிவுபடுத்தி உரையாற்றினார்.
இதனை
அடுத்து இம்
மக்களின் கனவுகள்
மெய்ப்பிக்கப்பட
வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம்
பெறுதல் வேண்டும் என வனஜீவராசிகள்
வளங்கள் இராஜாங்க
அமைச்சர் விமலவீர
திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்
புதிய ஆண்டில்
ஜனவரி 3 ஆம்
திகதி கொழும்பில்
சந்திப்பு ஒன்றினை
ஏற்படுத்தி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு
அறுதி பெரும்பான்மையை
பெற்று கொடுக்க
அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும்.என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை
மாநகர சபை
உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச சபை பிரதி
தவிசாளர் உள்ளூராட்சி
மன்ற இலக்கை
நோக்கிய செயற்பாட்டாளர்களும்
பெரும் திரளான
பொதுமக்களும் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.