2020.06.03 அமைச்சரவைத் தீர்மானங்கள்
2020.06.03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட
அமைச்சரவைத் தீர்மானங்கள்
விடயங்களின் சாரம்சம் பின்வருமாறு:
• பொருளாதார புத்துயிரளிப்பு சபை
இந்த விடயம் மற்றும் இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ
அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக
1. சிறிய மற்றும் நடுத்தர மற்றும் ஏனைய தொழில்
முயற்சியாளர்களின் மறுசீரமைப்புக்கான நிதி கோரிக்கைக்கு அமைவாகவும் இலங்கை மத்திய
வங்கியின் மறுசீரமைப்பு வசதியை 50 பில்லியன் ரூபா தொடக்கம் 150 பில்லியன் ரூபா வரை அதிகரித்தல்
2. கொவிட் 19 தொற்றின் காரணமாக செலுத்தமுடியாமல் போன
அனைத்து வருமான வரியை தண்டப்பணத்திலிருந்து விடுவித்தல்
இதற்கமைவாக, 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்
தாமதக்கட்டணம் அறவிடப்படுவதில்லை. அத்தோடு 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் தாமதக் கட்டணம்
அறவிடப்படும்.
3. கொவிட் 19 நிலைமைக்கு மத்தியில் பொருளாதார மறுமலர்ச்சி
முன்னுரிமைகள் , கடந்த 5 வருட காலப்பகுதியில் தேசிய
மின்சாரக்கட்டடைப்புக்கு பாரிய அளவில் மின் அனல் நிலையங்கள் உள்வாங்கப்படாமை
மற்றும் 2020 - 2021 ஆண்டு
காலப்பகுதியில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை கவனத்தில் கொண்டு புத்தளத்தில் 300 மெகா வோட் அனல் மின் நிலையத்தை
ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு மின்சார சபையின் தலைவரை நியமிப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டது.
4. பொது இடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி
இலங்கையில் மீளுருவாக்கம் மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன்
திட்டத்தை ஆரம்பித்தல்.
• முன்னைய அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய பற்றுச்சீட்டுக்களுக்கான
நிதியை செலுத்துதல்
முன்பு பதவியிலிருந்த அரசாங்கத்தினால் கடந்த வருடத்தின்
போது பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைகள் ,விநியோகம் மற்றும் ஒப்பந்த போன்றவற்றிற்காக செலுத்தப்பட
வேண்டியுள்ள பற்றுச்சீட்டுகளின் பெறுமதி 240.7 பில்லியன் ரூபாவாகும். தற்பொழுது இதில் 196.6 பில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்படடிருப்பதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்ற
ரீதியில் அமைச்சரவைக்கு அறிவித்தார். மேலும் 44 பில்லியன் செலுத்தப்படவேண்டியுள்ளதுடன்
தற்பொழுது நிலவும் சிரமமான நிதி சூழ்சிலையிலும் கூட முறையாக செலுத்தப்படுகிறது.
• தேசிய பல்கலைக்கழக கட்மைப்பை விரிவுபடுத்துதல் உயர்கல்வி
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்ப்பட்ட பரிந்துரைக்கு
அமைவாக
ஆசிய அபிவிருத்தி வங்கியின், விஞ்ஞான தொழில்சுட்பம் மற்றும் மனித வள
திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன்தொகையை அதிகரித்தத்தன் மூலம் தேசிய
பல்கலைக்கழக கட்டமைப்பில் விசேடமாக தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தும்
பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த அரசாங்கத்தின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குள்
உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 30,000 தொடக்கம் 60,000 வரையில் அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பல்கலைக்கழகம் வீதம் அமைப்பதற்கும்
திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் தற்பொழுது வழங்கப்படும் 165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 50 அமெரிக்க மில்லின் டொலர்களினால்
அதிகரிப்பட்டதன் மூலம் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதடன் இந்த வருடத்தில்
களுத்துறை , நுவரெலியா ,
ஹம்பாந்தோட்டை , மாத்தறை , காலி ஆகிய மாவட்டங்களில் புதிய தேசிய
பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு பல்கலைக்கழகம் என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்படும்.
இதில் நோய் எதிர்ப்பு . மற்றும் அறுவை சிகிச்சைப்பிரிவு மற்றும் தொற்றா நோய்
மற்றும் ஒவ்வாமை தொடர்பான நவீன பரிசோதனை நடத்தும் அலகொன்றையும்; ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் கீழ் தற்பொழுது சம்பந்தப்பட்ட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுடன்
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை பரிமாறிக் கொள்ளும் வேலைத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படுவதுடன் எதிர்காலத்தில் இந்த வெளிநாட்டு புத்திஜீவிகள் மற்றும்
அறிஞர்கள் ஆகியோருடன் ஆய்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக மேலும்
விரிவுபடுத்தப்படும்.
• நீரியல் வள அபிவிருத்தி பணிகளின் கீழ் இறால் உற்பத்தியை
மேம்படுத்துதல்
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் என்ற ரீதியில்
டக்ளஸ் தேவானந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நீரியல் வள
தொழிற்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விசேட இறால்களை
இனப்பெருக்கத்திற்காக பண்ணைகளுக்கு வழங்குதல்.
நாரா நிறுவனத்தின் பங்களிப்புடன் வடமேல் மாகாணத்தில்
முக்கியமாக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலுள்ள இனபெருக்க மத்திய நிலையங்களில்
இந்த விசேட இறால்களின் உற்பத்தியை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
• ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாலங்களை நிர்மாணித்தல்.
பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் அவர்கள்
சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைய , கடந்த அரசாங்கத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாணப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 18 பாலங்களின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பித்தல்.
ஒரு இலட்சம் கிலோமீற்றர் விதிகளை நிர்மாணிக்கும்
வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிர்மாணப்பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார
சபையினால் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபையிடம் வழங்குவதற்கு அங்கீகாரம்
வழங்கப்பட்டதுடன் , நெடுஞ்சாலை மாகாண
அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் இதற்கான பணிகளை முன்னெடுத்தல்
• கடந்த கால வரட்சியினால் தேயிலைக்கன்றுகளின் அழிவை எதிர்
நோக்கிய சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு தேயிலை கன்றுகளை இலவசமாக வழங்குதல்
பெருந்தோட்ட தொழிற்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய துறை அமைச்சர்
ரமேஷ் பத்திரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக கடந்த
மாதங்களில் நிலவிய வரட்சியின் காரணமாக அழிந்த தேயிலைக் கன்றுகளுக்கு பதிலாக சிறிய
தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அமைச்சரவையினால் கொள்கை
ரீதியில் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில்
கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்கள்
• நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டமையால்
சிரமங்களுக்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
இது தொடர்பில் சமீபத்தில் பிரதமரின் தலைமையில் இலங்கை
மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படதாகவும்
இதன் போது , நிதி நிறுவனம்
வீழ்ச்சியடைதல் மற்றும் மூடப்படுவதினால் வைப்பீட்டாளர்கள் எதிர்நோக்கும் சிரமம்
தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் மத்திய வங்கி ஆளுனரினால் எதிர்காலத்தில்
நிதிநிறுவனங்களின் மீது நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்துவதற்கும்
வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.
த பினான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்தில்
கொள்ளும் பொழுது இந்த நிறவனம் ஏலமிடப்படும் வரையில் அந்த நிறுவனத்தில்
வைப்பீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
மேற்கொள்ளும்.
• பாதுகாப்பான நாடொன்றிற்காக விசேட ஜனாதிபதி செயலணியை
அமைத்தல்
இலங்கை அரசியல் யாப்பின் 33 ஆவது சரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக பாதுகாப்பான நாடொன்று ஒழுக்கத்தை மதித்தல்,
சட்டத்தை மதித்தல்
மற்றும் பண்புகளை மதிக்கும் சமூகமொன்றை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்பு
செயலாளரினதும், முப்படை
தளபதிகளினதும், பொலிஸ் மா
அதிபரினதும், முப்படை மற்றும்
புலனாய்வு பிரிவின் பிரதானிகளின் அங்கத்துவத்துடன் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை
அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் நாடு
முழுவதிலும் சட்டம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்
இதன் முழுமையான வீடியோ மற்றும் குரல் பதிவு கீழ் கண்ட
லிங்கின் மூலம் பெற்றக் கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment