2020.06.10 அன்று அமைச்சரவைக்
கூட்டத்தின் போது
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேச
செயலாளர் பிரிவில்
இருந்த மீதொட்டமுல்லை
கழிவுப்பொருள் மேடு
2017.04.14 திகதியன்று சரிந்து விழுந்ததினால்
சேதமடைந்த வாகனங்களுக்கு
நஷ்டஈடு வழங்குதல்
கொழும்பு
மாவட்டத்தில் கொலான்னாவ பிரதேச செயலாளர் பிரிவில்
அமைந்திருந்த மீதொட்டுமுல்லை கழிவுப்பொருள்
மேடு 2017.04.14 திகதியன்று சரிந்து விழுந்ததினால் சேதமடைந்த
36 வாகனங்களுக்கான சேதங்களை மதிப்பீடு
செய்வதற்காக கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளரின்
தலைமையில் குழுவொன்று
நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினால்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக
தகுதிபெறும் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை
வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
02. இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின்
(Actuarial Expert) காப்பீட்டுக் கணிப்பாளர்
ஆலோசனை சேவையை வழங்குதல்
உலக
வங்கியின் நிதியுதவியின்
கீழ் இலங்கை
நிதிப் பிரிவை
நவீனமயப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன்
இலங்கை காப்புறுதி
ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும்
ஒரு பங்குதாரர்
என்ற ரீதியில்
செயல்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் காப்புறுதி
துறையின் அபிவிருத்தி நவீனமயத்திற்காக
9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பிரிவுகளை
நடைமுறைப்படுத்துவதற்காக 5 ஆலோசகர்களை இணைத்துக்
கொள்வதற்கு இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு
திட்டமிட்டுள்ளதுடன் அதன் கீழ்
காப்பீட்டுக் கணிப்பாளர் ஆற்றல்களைக் கொண்ட
(Actuarial Expert) சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக
பெறுகை முறை
கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கமைவாக அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 2 வருட காலத்திற்காக நெதர்லாந்தின் டெயுஸ்
மோரிக் அவர்களுக்கு
வரி அடங்கலாக
4 இலட்சம் அமெரிக்க
டொலர்களை செலுத்துவதற்கு
அமைவாக, அவரது
ஆலோசனை சேவையை
ஒப்பந்த அடிப்படையில்
வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. நடுத்தர வகுப்பினரின் வருமானத்திற்கு வாடகை
அடிப்படையில் வீடுகளை வழங்கும் திட்டம்
தூர
இடங்களிலிருந்து தொழிலுக்காக வரும் நடுத்தர வகுப்பினருக்கு
தங்குமிட
வசதிக்காக வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்காக
சதுர அடி
ஆகக்கூடிய வகையில்
350 சதுர அடியிலான
'ஸ்டுடியோ' வகையிலான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு
நகர அபிவிருத்தி
அதிகார சபையினால்
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக , பிரதான
பெருந்தெருக்கள் மற்றும் ரயில் பாதைகள் மூலம்
சேவைகளை வழங்கும்
முக்கிய நகர
மத்திய நிலையங்களிலிருந்து
3 கிலோமீற்றர் தொடக்கம் 5 கிலோமீற்றருக்கு
உட்பட்ட வகையில்
இவ்வாறான வீடமைப்புத்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
தேவையான நடவடிக்கையை
மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. சிறைச்சாலை கைதிகளின் பிணை மனுக்கான
விண்ணப்பத்தை கவனத்தில் கொள்ளுதல் மற்றும் விளக்கமறியலை
நீடிப்பதற்கான காணொளி கலந்துரையாடல் கட்டமைப்பை பயன்படுத்துதல்
நாடு
முழுவதிலும் உள்ள 23 சிறைச்சாலைகளில் சுமார் 15, 000
விளக்கமறியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக இவர்களில்
சுமார் 5,400 பேரை நாளாந்தம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட
வேண்டியுள்ளது. தற்பொழுது நாட்டில் நிலவும் நிலைமைக்கு
மத்தியிலும் சமீப காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில்
விளக்கமறியல் கைதிகளை அழைத்துச் செல்லும் பொழுது
பஸ்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக கைதிகளைப் போன்று
சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்ததைக்
கவனத்தில் கொண்டும்
சிறைச்சாலைகளில் இருக்கும் பொழுது அவர்களது பிணை
மனு விண்ணப்பத்தை
வீடியோ கலந்துரையாடல்
கட்டமைப்பை பயன்படுத்தி நீதிமன்றம் கவனத்தில் கொள்வதற்கான
வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி,
மனித உரிமைகள்
மற்றும் சட்ட
மறுசீரமைப்பு அமைச்சினால் தி;ட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம்
என்ற
ரிதியில் கொழும்பு மாவட்டத்தில் 23 நீதிமன்றங்கள் மற்றும்
4 சிறைச்சாலைகளில் 12 இடங்களில் உத்தேச
வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம்
12ஆம் திகதி
இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு
தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய
ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட
தொழிலாளர் சட்டத்தில்
திருத்தத்தை மேற்கொள்ளுதல்
2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று
இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு
தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய
தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் 'நெனபல சஹித்த
லமா பரபுரக்'
என்ற (பாண்டித்தியமிக்க
தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ் குறிப்பிடப்பட்ட வகையில்
நாட்டில் அனைத்து
சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு
அமைவாக கிடைக்க
வேண்டிய சிறப்புரிமைகள்
மற்றும் உரிமைகளை
உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக்கல்வி வயதிற்கு அமைவான
வகையில் ஊழியர்களை
சேவையில் ஈடுபடுத்தும்
ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில்
கீழ்கண்ட தொழிலாளர்
கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
1. 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன்
கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள்
மற்றும் அலுவலக
ஊழியர்கள் தொடர்பான
(சேவை மற்றும்
சம்பள முறைப்படுத்துதல்)
சட்டம்;;:
2. 1956 ஆம் ஆண்டு இலக்கம் 47 இன்
கீழான பெண்கள்,
இளைஞர்கள் மற்றும்
சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டம்
3. (135 அதிகாரம் - ) ஆகக் கூடிய சம்பளம்
( இந்திய தொழிலாளர்கள்)
கட்டளைச் சட்டத்தில்
திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம்)
4. 1942 ஆம் ஆண்டு இலக்கம் 45 இன்
கீழான தொழிற்சாலை
கட்டளைச் சட்டம்
5. 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான
ஊழியர் சேமலாப
நிதி சட்டத்தில்
ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று
அரசாங்க அதி
விசேட வர்த்தமானி
அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில்
உள்ள கட்டளை
06. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்
தங்காலை பிரதேச
செயலாளர் பிரிவில்
மாவெல்லை மற்றும்
ரெகவ மீன்
வள துறைமுகங்களை
நிர்மாணிப்பதற்கான ஒப்பத்தத்தை வழங்குதல்
ஹம்பாந்தோட்டை
மாவட்டத்தில் தங்காலை பிரதேச செயலாளர் பிரிவில்
அமைந்துள்ள மாவெல்லை மற்றும் ரெகவ மீன்
வள துறைமுகங்களை நிர்மாணிப்பதற்காக
போட்டித் தன்மையுடனான
பெறுகை நடைமுறை
கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய
சம்பந்தப்பட்ட ஒப்பந்தின் ஒழுங்கிற்கு அமைய Arking Engineering(PVT) Ltd. Joint
venture with BPPE நிறுவனம் மற்றும்;RR Construction (PVT) Ltd. என்ற நிறுவனங்களுக்கு
ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. இலங்கை முழுவதிலுமுள்ள குறைந்த வருமானத்தைக்
கொண்ட சிறுநீரக
நோயாளிகளுக்கு மாதாந்த வாழ்வாதார நிதியை வழங்கும்
வேலைத்திட்டம்
சிறுநீரக
நோய் பரவும்
அனர்த்தத்தைக் கொண்ட 11 மாவட்டங்களில் ( அநுராதபுரம், பொலநறுவை,
மாத்தளை, திருகோணமலை,
அம்பாறை, வவுனியா,
குருணாகல் , முல்லைத்தீவு, பதுளை, மொனராகலை மற்றும்
ஹம்பாந்தோட்டை) பிரதேச செயலாளர் பிரிவுகளில் 82 குறைந்த
வருமானத்தைக் கொண்ட சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம்
5000 ரூபா வீதம்
வாழ்வாதார நிதியுதவியை
வழங்கும் வேலைத்திட்டம்
தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன் கீழ்
இதுவரையில் குறைந்த வருமானத்தைக் கொண்ட 25,320 சிறுநீரக
நோயாளிகளுக்கு இந்த நிதியுதவி மாதாந்தம் செலுத்தப்படுகின்றது.
இந்த கொடுப்பனவை
பெற்றுக் கொள்வதற்காக
உறுதிசெய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
மேலும் குறைந்த
வருமானத்தைக் கொண்ட சிறுநீர நோயாளிகள் 13,849 பேருக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு
அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில்
தொடர்ச்சியாக தொலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக
மஹாபொல புலமைபரிசில்
நிதியை செலுத்துதல்
அனைத்து
பல்கலைக்கழகங்களில் சுமார் 50 சதவீதம்
அதாவது 60 000 மாணவர்கள் மஹாபொல புலமைபரிசில்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ஒரு மாணவருக்கு
மாதாந்தம் 5இ000ஃஸ்ரீரூபா வீதம் வழங்கப்படுவதுடன்
இதற்காக 160 மில்லியன் ரூபா மாதாந்தம் செலவிடப்படுகின்றது.
இத் தொகையில்
51 சதவீதம் மஹாபொல நிதியத்திலிருந்தும்,
எஞ்சிய 40 சதவீதம்
திறைசேரியினாலும் வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள்
மூடப்பட்டிருந்த போதிலும் தொலை கல்வி நடைமுறையின்
மூலம் மாணவர்களின்
கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறுவதினால் தங்குமிடக்
கட்டணம் தொலைபேசிக்
கட்டணம் போன்ற
செலவை மேற்கொள்ள
வேண்டியிருப்பதை கவனத்தில் கொண்டு பொருத்தமான வகையில்
தேவையான மானியத்தைப்
பெற்றுக் கொண்ட
பின்னர் உரிய
வகையில் மஹாபொல
புலமைபரிசில் பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட
கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவையினால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. சிறியளவிலான விவசாய நடவடிக்கைகளில் பங்குகொள்வோருக்கான
வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு
வழங்கப்படும் கடன் வசதியில் ஆகக்கூடிய கடன்
எல்லையை அதிகரித்தல்
மற்றும் விவசாய
மதிப்புமிக்க அபிவிருத்தி திட்ட மேம்பாட்டு மீதான
சீரமைப்பு கடன்
மற்றும் சீரமைப்பை
மேற்கொள்ளுதல்.
விவசாய
அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ( IFAD) மற்றும் இலங்கை
அரசாங்கத்தின் நிதியின் மூலம் கிராமத்தில் சிறியளவிலான
விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக சிறிய அளவிலான விவசாய நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளோர் கலந்து கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
6 வருட காலம்
முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்
இந்த வேலைத்திட்டம்
2023 ஆம் ஆண்டு
ஜுன் மாதம்
30 ஆம் திகதியன்று
பூர்த்தி செய்யப்படவுள்ளது.
அத்தோடு இதன் மொத்த முதலீடு 105 மில்லியன்
அமெரிக்க டொலர்களாகும்.
மகாவலி வலயத்தில்
4,000 குடும்பங்கள் அடங்கலாக நாடுமுழுவதிலும்
57,500 குடும்பங்களை இலக்காகக் கொண்டு
நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின்
கீழ் அரச,
தனியார் மற்றும்
விவசாய உற்பத்தியாளர்களின்
பங்களிப்பில் (PublicPrivate and
Partnership – 4p) (actuarial expert) விவசாய மதிப்புமிக்க திட்டம்
நடைமுறைப்படுத்தப்படும். இந்த வேலைத்திட்டத்தின்
கீழ் பயனாளிகளுக்கான
சீரமைப்பு கடன்
எல்லையை 3 இலட்சம்
ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கும்
, இந்த திட்ட
மேம்பாட்டிற்காக சந்தை அல்லது வர்த்தக நடவடிக்கைகளை
மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணம்
அல்லது சேவைகளை
வழங்குவதற்கு 1.8 மில்லியன் ரூபா ஆகக்கூடிய வகையில்
சீரமைத்தல் பிரதான பங்களிப்பை வழங்குவதற்கும் இந்த
மேம்பாட்டிற்காக இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவும்
வருடாந்த வட்டி
வீதம் 10 சதவீதத்திற்கு
உட்பட்டதாக ஆகக்கூடிய வகையில் 09 மில்லியன் ரூபாவுக்கு
உட்பட்டதாக சீரமைப்பு
வசதியை வழங்குவதற்கு
அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. மாத்தறை நில்வளா எளிய என்ற
அபிவிருத்தி திட்டத்தை 2018 தொடக்கம்
2020 வரை மகாவலி
விவசாயம் , நீரப்;பாசனம் மற்றும் கிராம
அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைத்தல்
2018 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தில்
ஆரம்பிக்கப்பட்ட நில்வளா எளிய என்ற அபிவிருத்தி
திட்டத்தின் கீழ் சுமார் 1800 ஹெக்டயர் நிலப்பரப்பில்
பரந்துள்ள கிரல
கெலே என்ற
சதுப்பு வன
பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன்
இந்தத் திட்டம்
தற்பொழுது அரச
நிர்வாகம் உள்நாட்டலுவல்கள்,
மாகாணசபை மற்றும்
உள்ளுராட்சி அமைச்சின் கீழ் மாத்தறை மாவட்ட
செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட
திட்டம் பிரதேச
பிரதான ரீதியில்
சதுப்பு நில
நீரப்;பாசன
கால்வாய் வழிகள்
மற்றும் சதுப்பு
நிலத்தைக் கொண்டதாகும்.
இவ்வாறான பிரதேசத்தில்
அபிவிருத்தியை மேற்கொள்வதில் நீர்ப்பாசன திணைக்களத்தின் நெருக்கமான
கண்காணிப்பு தேவை என்பதினால் இந்த திட்டம்
மகாவலி, விவசாயம்,
நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சிடம்
ஒப்படைத்து மேலும் நடைமுறைப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
11. வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி அபிவிருத்தி
(தனியார்) நிறுவனத்தை
தேசிய கால்நடை
அபிவிருத்தி சபை கொண்டுள்ள பண்ணையாக முன்னெடுத்தல்
தேசிய
கால்நடை வள
அபிவிருத்தி சபை கொண்டுள்ள 51 சதவீதம் மற்றும்
லிபியா அரபு
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் கொண்டுள்ள 41 சதவீதத்தை
கொண்டதான வரையறுக்கப்பட்ட
விவசாய மற்றும்
கால்நடை (தனியார்)
நிறுவனம் 1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. லிபிய அரபு வெளிநாட்டு முதலீட்டு
நிறுவனம் கொண்டிருந்த
49 சதவீத பங்குகள் 2014 ஆம்
ஆண்டில் கால்நடைவள
அபிவிருத்தி சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட
இலங்கை கோழி
அபிவிருத்தி (தனியார்) நிறுவனம் என்ற ரீதியில்
இதுவரையில் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரையில் இந்த
நிறுவனம் பெரும்
நிதி நெருக்கடியை
எதிர்கொண்டுள்ளதுடன் அதன் நிர்வாகம்
மற்றும் முகாமைத்துவ
பணிகள் சீர்குலையும்
நிலைமையில் உள்ளது. இந்த நிலைமையின் கீழ்
வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி அபிவிருத்தி (தனியார்)
நிறுவனத்தை கலைத்து இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டுவரும்
மாவத்தை விவசாய
பண்ணை மற்றும்
அதன் பணியாளர்களை
தேசிய கால்நடை
வள அபிவிருத்தி
சபை பொறுப்பேற்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
12. அரச துறை நிறுவனங்களினால் பெறுகை
நடைமுறைக்கு அப்பால் இலங்கை அரசு வணிக
(பல்வேறு) கூட்டுத்தாபனத்தில்
பொருட்கள் மற்றும்
சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல்
பெறுகை
செயற்பாடுகளுக்கு அப்பால் 50 மில்லியன் ரூபா வரையிலான
பொருட்கள், உபகரணங்கள் அல்லது இயந்திரங்களை அரச
துறையின் நிறுவனத்தினால்
இலங்கை அரசு
வணிக (பல்வேறு)
கூட்டுத்தாபனத்திடம் கொள்வனவு செய்வதற்காக
2019 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம்
9ஆம் திகதி
நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை 1 வருட
காலத்திற்கு தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக
அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
13. சுரக்ஷா மாணவர் காப்புறுதி
சுரக்ஷா
மாணவர் காப்புறுதி
திட்டத்தின் கீழ் காப்புறுதியை வழங்கும் எலியன்ஸ்
இன்சுரன்ஸ் நிறுவனத்துடனான உடன்படிக்கை
2020 ஆம் ஆண்டு
மே மாதம்
31 ஆம் திகதியுடன்
நிறைவடைந்துள்ளது. இந்த காப்புறுதி
வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக
சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்
சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு, மாணவர்களுக்கான காப்புறுதிக்கான
சேவையை வழங்கும்
நிறுவனத்தை தெரிவுசெய்வதில் அரசாங்கத்தின்
காப்புறுதி நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட சேவைகளை
பெற்றுக்கொள்வதற்கும், இதற்கமைவாக காப்புறுதி
நிறுவனமொன்றை தெரிவுசெய்யப்படும் வரையில்
2020.06.01 திகதி தொடக்கம் 2020.09.30 ஆம் திகதி வரையில்
இலங்கை காப்புறுதி
கூட்டுத்தாபனத்திடம் சம்பந்தப்பட்ட காப்புறுதி
சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
14. இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வ 3 வீடுகளை
(03) பெற்றுக் கொள்ளுதல்
இலங்கை
பரீட்சை திணைக்களத்தினால்
அரச, அரச
பங்குடமை நிறுவனம்
கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளுக்காக வருடாந்தம் 350 இற்கும்
மேற்பட்ட பரீட்சைகள்
நடத்தப்படுவதன் காரணமாக இந்த திணைக்களத்தின் கடமையில்
ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நள்ளிரவு வரையில் கடமையில்
ஈடுபடவேண்டியிருப்பதினால், இதன் காரணமாக
தூர இடங்களில்
இருந்து கடமைக்கு
வரும் அதிகாரிகள்
சிரமங்களை எதிர்கொள்ள
வேண்டியுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வு என்ற
ரீதியில் நகர
அபிவிருத்தி அதிகார சபையினால் பன்னிப்பிட்டிய வீர
மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வியன்புர வீடமைப்புத்
திட்டத்தில் 3 தொடர் வீடுகளை இந்த திணைக்களத்திற்கு
கொள்வனவு செய்து
அதிகாரிகளின் தங்குமிட வசதிகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. பாடசாலை மாணவர் சீருடைக்கான துணியை
கொள்வனவு செய்தல்
- 2021
அரச
மற்றும் அரசாங்க்தின்
உதவியை பெறும்
பாடசாலைகளில் மாணவர்களுக்கும் அரசாங்கத்தின்
அங்கீகாரத்தைப் பெற்ற பிரிவெனாக்களில் உள்ள பிக்கு
மாணவர் உள்ளிட்ட
மாணவர்களுக்கும் இலவசமாக சீருடைகளை வழங்குவதற்காக கல்வி
அமைச்சின் மூலம்
1993 ஆம் ஆண்டு
தொடக்கம் தொடர்ச்சியாக
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 2015 ஆம்
ஆண்டு தொடக்கம்
2020 ஆம் ஆண்டு
வரையில் சீருடைக்கான
துணியை வழங்குவதற்கு
பதிலாக வவுச்சர்
முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது
நாட்டில் நிலவும்
கொவிட் 19 (தொற்று நிலைமையின் காரணமாக ஏற்றுமதி
வருமானம் குறைவடைந்தமை
, பாடசாலை சீருடைக்கான
துணி இறக்குமதி
செய்யும் பொழுது
எதிர்கொள்ள வேண்டிய ஆகக்கூடிய வெளிநாட்டு செலாவணியை
கவனத்தில் கொண்டு
உள்ளுர் ஆடை
தயாரிப்பாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைக்குத் தேவையான
துணி வகைகளை
உள்ளூரில் தயாரிப்பது
பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில்
பாடசாலை சீருடையை
வழங்கும் பொழுது
வவுச்சருக்குப் பதிலாக உத்தியோகபூர்வ சீருடையை வழங்குவதற்கும்,
தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சின்
கீழ் பதிவு
செய்யப்பட்டுள்ள உள்ளூர் ஆடை வகை தயாரிப்பாளர்கள்
மத்தியில் மாத்திரம்
பெறுகை நடவடிக்கைகளை
முன்னெடுத்து பாடசாலை சீருடைக்குத் தேவையான துணி
வகைகளை வழங்குவதற்கும்;
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
16. தங்காலை வீரகெட்டிய வீதிக்காக அதிவேக
நெடுஞ்சாலையில் பெதிகம புதிய இடைமாறல் பகுதியை
நிர்மாணித்தல்
தங்காலை
- வீரகெட்டிய வீதிக்காக தெற்கு அதிவேக நெடுங்சாலையில்
பெதிகம என்ற
இடத்தில் இடைமாறல்
பகுதியை நிர்மாணிப்பதன்
மூலம் அதிவேக
நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் பெரும்பாலானோரை
கவருவதற்கு முடியுமென்று அடையாளங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, உத்தேச
புதிய இடைமாறல்
பகுதியை நிர்மாணிப்பதற்காகவும்
, அதற்காக தெற்கு
அதிவேக நெடுஞ்சாலையில்
2 பிரிவில் நிர்மாணப் பணிகளை முறையை பயன்படுத்துவதற்கும்
அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17. பொது பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பஸ்களுக்கு
ஆகக்கூடிய தனிக்குறிப்பீட்டை
அறிமுகப்படுத்துதல்
இலங்கை
போக்குவரத்து சபை தனியார் துறையினரால் பயணிகள்
போக்குவரத்திற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும்
மொத்த பஸ்களின்
எண்ணிக்கை 26 985 ஆவதுடன், இவையனைத்தும் பொருட்களை ஏற்றிச்
செல்வதற்கான லொறிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
பஸ்களாகும். இவை பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக
தயாரிக்கப்பட்டுள்ளதினால் வாகனத்தின் பிரேக்
பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாவது
எதிர்நோக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான வசதிகளுடன் .பயணிகள்
பயணிக்கக்கூடிய வகையில் பொருத்தமான பஸ்களை எதிர்காலத்தில்
நாட்டிற்கு இறக்குமதி செய்வதில் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டிய தனிகுறியீட்டு
. மற்றும் தயாரிப்புக்களை
மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு
அமைவாக அதிகாரிகளின்
ஒத்துழைப்புடன் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசுகளை
சமர்ப்பிப்பதற்காக கீழ்கண்ட அமைச்சர்களின்
தலைமையில் துணைக்குழுவொன்றை
நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
• போக்குவரத்து
சேவை முகாமைத்துவ
அமைச்சர் அவர்கள்
• தொழிற்சாலை
மற்றும் விநியோக
முகாமைத்தவ அமைச்சர் அவர்கள்
• கல்வி
அமைச்சர் அவர்கள்
18. இந்திய கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும்
மஹாவ தொடக்கம்
ஓமந்தை வரையிலான
ரயில் பாதை
புனரமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
வரியிலிருந்து விடுவித்தல்
இந்திய
கடனுதவியின் கீழ் மஹாவ தொடக்கம் ஓமந்தை
வரையிலான ரயில்
பாதை புனரமைப்புக்கான
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
2010 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
2 ஆம் திகதி
அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை
விசேட திட்டமாக
பிரகடனப்படுத்தி சம்பந்தப்பட்ட வரியிலிருந்து
விடுவிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. மோட்டர் வாகன திணைக்களத்தின் ஈ
மோட்டார்களின் திட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை
மேற்கொள்வதற்காக மேலதிக மானியத்தை பெற்றுக் கொள்ளுதல்
மோட்டார்
வாகன போக்குவரத்து
திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் சேவைகள்
பொதுமக்களின் கேந்திரமாக மாற்றியமைப்பதற்காக
திட்டமிடப்பட்டுள்ள ஈ மோட்டரின்
திட்டத்தை நடைமுறைப்படுத்தும்
ஒப்பந்தம் மெட்ரோ
பொலிட்டன் எட்வான்ஸ்
வோர்க் நொலஜஸ்
(தனியார்) நிறுவனத்திடம்
2018 ஆம் ஆண்டில்
ஜுலை மாதத்தில்
வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக நாரஹேன்பிட்டிய தலைமை அலுவலக
வளவு மற்றும்
மாவட்ட அலுவலக
வளவை பொருத்தமான
வகையில் தயார்செய்யப்பட்ட
போதிலும் அதற்கு
தேவையான நிதி
கிடைக்காததினால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தாமதமடைந்துள்ளது. குறித்த வகையில் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்காக அத்தியாவசிய மற்றும்
துரிதமாக மேற்கொள்ளப்பட
வேண்டிய பணிகளை
நிறைவேற்றுதவற்கு தேவையான நிதியை அடுத்துவரும் வரவு
செலவு ஆவணத்தின்
மூலம் வழங்குவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
20. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ்
சூரிய எரிசக்தி
திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
நாட்டை
மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை கட்டமைப்பிற்கு
அமைவாக இந்த
நாட்டில் எரிசக்தி
துறைக்கு
மீள் எரி சக்தியை சேர்த்துக் கொள்வதற்கான
இலக்கை பூர்த்தி
செய்வதற்கான சூரிய எரிசக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை
இந்திய எக்சிமா
வங்கியின் மூலம்
வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக உத்தேச திட்டத்தின் கீழ் அரசாங்க
கட்டிடத்தின் கீழ் கூரைகளில் சூரிய எரிசக்தி
கட்டமைப்பை ஸ்தாபிப்பதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு
தேவையான மின்சாரத்தை
வழங்குவதற்கும் மன்னார் , திருகோணமலை, மொனராகலை, அநுராதபுரம்
மற்றும் அம்பாந்தோட்டை
மாவட்டங்களில் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின்
வீடுகளுக்காக சூரிய பெனல் கட்டமைப்பை வழங்குவதன்
மூலம் அவர்களது
மின்சாரத் தேவையை
பூர்த்தி செய்வதில்
முக்கியத்துவம் வழங்கி சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
21. வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும்
காணி அபிவிருத்தி
ஆணைக்குழு கொண்டுள்ள
பைன்ஸ் வன
உற்பத்தி ஒரலியோபிசின்
சாறுகளை வழங்குதல்
வனப்
பாதுகாப்பு திணைக்களம் மற்றும் காணி மறுசீரமைப்பு
ஆணைக்குழு கொண்டுள்ள
சுமார் 6200 ஹெக்டயர் பைனஸ் வன உற்பத்தியில்
ஒலிவர் பிசின்
வடிசாலைக்காக போட்டி மிகுந்த பெறுகைமுறையை கடைப்பிடித்து
பொருத்தமான நிறுவனத்தை தெரிவுசெய்வதற்கு
தேவையான நடவடிக்கை
மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22.அநுராதபுரம்
மிரிஸ்சவெட்டிய மாகாவிகாரைக்கருகாமையில் அமைந்துள்ள
வனப்பாதுகாப்பு திணைக்களம் கொண்டுள்ள நிலப்பகுதியை பௌத்த
சாசன , கலாசாரம்
மற்றும் மத
அலுவல்கள் அமைச்சிடம்
ஒப்படைத்தல்
மிரிஸவெட்டிய
மகாவிகாரைக்கு அருகாமையில் உள்ள 2 ஏக்கர் 22.6 பேர்ச்
காணியளவைக் கொண்ட பகுதியில் வன பாதுகாப்புத்
திணைக்களத்தின் சுற்றுலா விடுதி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த காணி
அநுராதபுரம் புனித பூமிக்குள் அமைந்திருப்பதினாலும், தொல்பொருள் கொண்ட பிரதேசம் என்பதினாலும்
இதில் புதிதாக
நிர்மாணப் பணிகள்
எதுவும் மேற்கொள்ளக்கூடாது
என்று தொல்பொருள்
திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட
காணியின் ஒரு
பகுதி மிரிஸ்சவெட்டிய
மகாவிகாரைக்கு அருகாமையில் இருப்பதினால் அது விகாரையின்
எதிர்கால மத
மற்றும் சமூகப்
பணிகளை முன்னெடுப்பதற்கான
வசதிக்காக காணியை
இந்த விகாரையிடம்
வழங்குமாறு விகாராதிபதியினால் கோரிக்கையொன்று
முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில்
உரிய வகையில் புனித பூமி எல்லையைப்
பிரகடனப்படுத்தும் பொழுது புனித
பூமி அபிவிருத்திக்குழு
அனுமதியின் அடிப்படையில் மிரிஸ்சவெட்டிய
விகாரைக்கு வழங்கக்கூடிய வகையில் அதன் காணியின்
ஒரு பகுதியை
பௌத்தசாசனம் , கலாசாரம் மற்றும் மத அலுவல்கள்
அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
23. COVD 19 தொற்றிற்குப் பின்னர்
சுற்றுலா தொழிற்துறைக்காக
நிவாரணத்தை வழங்குதல்
கொவிட்
19 தொற்றின் காரணமாக சுற்றுலா தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ள
அழுத்தத்தை குறைத்து சுற்றுலா தொழிற்துறையை மீண்டும்
வழமை நிலைக்கு
கொண்டு வருவதற்காக
கீழ் கண்ட
வகையில் சுற்றுலா
தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் தனிநபர்களுக்கு
நிவாரணத்தை வழங்கும் வேலைத்திட்டமொன்று
நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
• சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள
சுற்றுலா ஹோட்டல்
பிரிவு, போக்குவரத்து
முகாமைத்துவ நிறுவனம் ஃ சுற்றுலா பிரிதிநிதிகளின்
பணியாளர் சபை
ஊழியர்களுக்கு 6 மாத காலத்திற்காக மாதமொன்றிற்கு 20, 000 ரூபா வீதம் சம்பளத்தை வழங்குவதற்காக
4 சதவீத வட்டியின்
அடிப்படையில் 2 வருட நிவாரண காலத்துடனான
5 வருட கால எல்லைப் பகுதிக்குள் திருப்பி
செலுத்தும் அடிப்படையில் கடன் வசதிகளை வழங்குதல்
• சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள
சிற்றுண்டிச்சாலைகள் , உணவுகளைப் பெற்றுக்
கொள்ளும் இடங்கள்
மற்றும் உடற்பயிற்சி
மத்திய நிலையங்கள்
சுற்றுலா தொழிற்துறையுடன்
தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும்
நபர் ஒருவருக்கு மாதமொன்றிற்கு
15,000 ரூபா வீதம் 6 மாத காலத்திற்கு சம்பளத்தை
வழங்குவதற்காக கடன் வசதியை வழங்குதல்
• சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள
சுற்றுலா வழிகாட்டி
ஒருவருக்கு 1 முறை மாத்திரம் செலுத்தப்படும் பணம்
தொகையாக ரூபா
20,000 கொடுப்பனவை இலங்கை சுற்றலா
அபிவிருத்தி அதிகார சபை மூலம் வழங்குதல்.
• சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள
சுற்றுலா சாரதியொருவருக்கு
ஒரு முறை
மாத்திரம் செலுத்தப்படும்
ரூபா 15 000 கொடுப்பனவை
இலங்கை சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபை மூலம் செலுத்துதல்.
• 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
1அம் திகதி
தொடக்கம் ஆகஸ்ட்
மாதம் 31ஆம்
திகதி வரையில்
செலுத்தப்பட வேண்டிய மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம்
2020 ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம்
பொதுவான 12 தவணைக் கொடுப்பனவில் செலுத்துவதற்கு வசதிகளை
செய்தல் மற்றும்
இந்த காலப்பகுதிக்குள்
மின்சாரம் அல்லது
நீர்விநியோக துண்டிப்பை மேற்கொள்வதில்லை
• சுற்றலா
தொழிற்துறை தொடர்புபட்ட குத்தகை வாகன வரி
செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள 6 மாத நிவாரண காலத்திற்கான
தாமத கட்டணம்
அறவிடாது 12 மாதங்களாக நீடித்தல்
0 comments:
Post a Comment