முஸ்லிம் காங்கிரஸ் தலைவா***!
வாக்குறுதிகளை வழங்கி ஏன்
இப்படி மக்களை ஏமாற்றினாய்...!!!


2001.02 04 ஆம் திகதி மாளிகைக்காடு சந்தி தொடக்கம் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் வரை உங்களை தோளில் சுமந்த மக்கள்தான் சாய்ந்தமருது மக்கள்.

அன்று சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் மக்கள் ஆரவாரம் செய்து
ஆர்ப்பரித்து உங்களை தனித் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஆதரவளித்த மக்கள்தான் சாய்ந்தமருது மக்கள்.

இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியது மாத்திரமல்லாமல் இறக்காமம், ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எழுதிக் கொடுத்து வாசிக்க வைத்த விடயம் என நக்கலாக பேசி மக்களையும் சிரிக்க வைத்து நீயும் சிரித்தாயே.

ஏன் தலைவா சாய்ந்தமருது மக்களை இப்படி ஏமாற்றினாய்.....!

பொத்துவில் மக்களுக்கு கடல் நீரை சுத்திகரித்தாவது குடி நீரை தேர்தல் வருவதற்கு முன் தந்துவிடுவேன் என்று பொத்துவிலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக மேடையில் வைத்து கூறி வாக்குறுதி வழங்கினாயே.

ஏன் தலைவா இப்படி பொத்துவில் மக்களை ஏமாற்றினாய்...!

பாலமுனையில் வைத்தியசாலை கட்டிடம் என்று பேசினாயே.

ஏன் தலைவா பாலமுனை மக்களை இப்படி ஏமாற்றினாய்..!

அக்கரைப்பற்றில் பொது விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக கூறி அடிக்கல் நாட்டினாயே.

ஏன் தலைவா அக்கரைப்பற்று மக்களை இப்படி ஏமாற்றினாய்...!

இறக்காமத்தில் உள்ள சிலையை ஒரு வாரத்துக்குள் அகற்றுவேன் என்று ஆர்ப்பரித்து அறிக்கை விட்டாயே.

ஏன் தலைவா முஸ்லிம் சமூகத்தை இப்படி ஏமாற்றினாய்..!

அட்டாளைச்சேனையில் சந்தைக்கட்டிடம், மற்றும் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவோம் என உனது கட்சி சார்பாக கூறப்பட்டதே.

ஏன் தலைவா அட்டாளைச்சேனை மக்களை இப்படி ஏமாற்றினாய்...

ஒலுவில் மக்களின் கடலரிப்பை பற்றியும், மக்களின் வாழ்வாதாரம் பற்றியும் உன்னிடம் பேசிய போது விரைவில் முடித்து தருகிறேன் அமைச்சரவைக்கு பத்திரம் தயாரிக்கப்படுகிறது என்றும் சொன்னாயே.

ஏன் தலைவா ஒலுவில் மக்களை இப்படி ஏமாற்றினாய்...!

கல்முனை- சம்மாந்துறை இணைந்த புதிய நகர அபிவிருத்தி திட்டம் என்று படங்கள் வரைந்து பல தடவைகள் கொழும்பிலும் கல்முனையிலும் கூட்டங்கள் நடத்தினாயே.

ஏன் தலைவா கல்முனை, சம்மாந்துறை மக்களை இப்படி ஏமாற்றினாய்..!

அம்பாறை பள்ளிவாயில் இனவாதிகளால் தாக்கப்பட்ட போது ரணிலை அம்பாறைக்கு கூட்டி வருவதாக கூறி அம்பாறைக்கு கூட்டிச் செல்லாமல் ஒலுவிலுக்கு கூட்டி வந்து சில நேரம் பேசிவிட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டார்களே.

ஏன் தலைவா முஸ்லிம் சமூகத்தை இப்படி ஏமாற்றினாய்...!

கல்முனை பிரதேசத்தில் மின்னொளியில் விளையாடும் விளையாட்டு மைதானம் ஒரு வருடத்திற்குள் அமைத்து தரப்படும் என்றாயே.

ஏன் தலைவா இளைஞர்களை இப்படி ஏமாற்றினாய்..!

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான தாருஸ்ஸலாம் கட்டடம் ஒலுவிலில் அமைக்கப்படும். இதன் வேலைகள் தேர்தல் முடிந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினாயே.

ஏன் தலைவா அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை இப்படி ஏமாற்றினாய்..!

தலைவா ..... நடைபெறவிருக்கும் இந்த பொதுத் தேர்தலில் இன்னும் எதனைக் கூறி கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்??????





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top