சம்மாந்துறை துணிக்கடையில்
திருடி தப்பிச் சென்றோர் கைது
துணிக் கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பௌஸி மாவத்தையில் கடந்த மாதம் 18ஆம் திகதி, அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு இளைஞர்கள் கடையின் காசு வைக்கப்படும் லாச்சியிலிருந்து ரூபா 85 ஆயிரத்தை களவாடி சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இம்முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிநடத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா, உப பரிசோதகர் ஜனோசன், சார்ஜன்ட் அப்துர் றவூப் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சம்மாந்துறை நகர் பிரதேசத்தை சேரந்த சந்தேகநபர்களான 18, 19 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.