அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின்
வைப்பீடுகளில் 6,00 000
ரூபாவுக்கு மாத்திரமே
இலங்கை
மத்திய வங்கி பொறுப்புக்கூறும்
நிதி நிறுவனமான த பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் வைப்பீடுகளில் 6,00
000 ரூபாவுக்கு மாத்திரமே
இலங்கை மத்திய வங்கி பொறுப்புக்கூறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிதி நிறுவனங்களில் 6,00 000 ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையை வைப்பீடு
செய்வது தொடர்பில் பொது மக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராம மக்கள் தமது பணத்தை வைப்பீடு செய்யும் கூட்டுறவு
வங்கிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் இதுதொடர்பிலும் கவனம்
செலுத்தப்பட்டிருபபதாகவும் அமைசசர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்
சந்திப்பில் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டமையால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக
கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் பிரதமரின் தலைமையில் இலங்கை மத்திய
வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படதாகவும்
தெரிவித்தார்.
இதன் போது , நிதி நிறுவனம் வீழ்ச்சியடைதல் மற்றும் மூடப்படுவதினால் வைப்பீட்டாளர்கள்
எதிர்நோக்கும் சிரமம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் மத்திய வங்கி
ஆளுனரினால் எதிர்காலத்தில் நிதிநிறுவனங்களின் மீது நம்பிக்கைத் தன்மையை
ஏற்படுத்துவதற்கும் வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் குறித்தும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.
த பினான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்தில்
கொள்ளும் பொழுது இந்த நிறுவனம் ஏலமிடப்படும் வரையில் அந்த நிறுவனத்தில்
வைப்பீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
மேற்கொள்ளும் என்றும் அமைச்ர் கூறினார்.
மத்திய வங்கியினால் இந்த விடயம் தொடர்பாக பிரதமருக்கு
அறிவிக்கப்பட்டதற்கு அமைய 93 வீதமான வைப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன்
வைப்பீட்டாளர்களின் பணத்தை விதிகளுக்கு
அமைவாக செலுத்துவதற்கு .நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
0 comments:
Post a Comment