கொரோனாவால் நிகழப்போவது என்ன?
மருத்துவ பத்திரிகை வெளியிட்ட தகவலால் அச்சம்



உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் சர்வதேச மருத்துவ பத்திரிகை அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

லென்செட் என்ற மருத்துவ பத்திரிகையில் சீனாவின் வுகான் மருத்துவ ஆய்வாளர்கள் குழு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் புதிதாக 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது, அவர்களை சோதித்ததில் அந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளிடமிருந்து இவர்களுக்கு பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே சீனாவால் மீண்டு இரண்டாவது சுழற்சியாக கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மக்களை காத்துக் கொள்ள முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை செய்தாலும் கொரோனா பரவலை தடுத்துவிட முடியாது.

கொரோனாவை தடுக்க சரியான தடுப்பூசிகண்டுபிடிக்கும் வரை கொரோனா பாதிப்பு தொடர்கதையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top