உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்
-கண்ணீர்கடலில் இடம்பெற்ற இறுதிச்சடங்கு

அமெரிக்காவில் உயிரிழந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோயிட்டின் இறுதிசடங்கு மினியாபொலிஸ் நகரில் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் மிகவும் அமைதியாக நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 25-ம் திகதி மினியாபொலிஸ் மாகாண பொலிசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்ட கறுப்பித்தனவரான ஜோர்ஜ் புளோயிட் பரிதாபமாக உயிரிழந்தார்.

மினியாபொலிஸில் நடைபெற்ற இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமன்றி உலகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஜோர்ஜ் புளோய்ட் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே உயிரிழந்த ஜோர்ஜ் புளோய்டின் இறுதிசடங்கு மினியாபொலிஸ் மாகணத்தில் நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் அரசு அதிகாரிகள், ஜோர்ஜ் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜோர்ஜ் புளோயிட்டின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது காதலி கோர்டினி ரோஸ் கதறி அழுதார்.

ஜோர்ஜ் புளோயிட்டின் இறுதிசடங்கு மினியாபோலிஸில் உள்ள நோர்த் சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

மினியாபோலிஸ் மாகாண ஆளுநர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top