அமெரிக்க ஜனாதிபதிக்கு
ஏற்பட்டுள்ள மோசமான நிலை!

பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியா பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அமெரிக்க வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா உச்சம் தொட்டு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதே ஜனாதிபதியாக அமெரிக்கர்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், மெத்தனப் போக்கிலும், பொருளாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டும் அவர் செயலாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனாவின் கோரத்தாண்டம் இந்தளவிற்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதற்கும் அவரின் திறமையின்மையை காட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

கொரோனா அலை அடங்குவதற்கு முன்னர் இன்னொரு வரலாற்று சங்கடத்தை அல்லது பெரும் அவமானத்தை அமெரிக்க சந்தித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தான் அமெரிக்க பொலிஸ் தடுப்பில் இருந்து, இறந்த கறுப்பின அமெரிக்க பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அமெரிக்க பிரஜை இருதய நோயினால் உயிரிழந்ததாக கடந்த 25 ஆம் திகதி காவற்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

ஆனால், உயிரிழந்த கருப்பின அமெரிக்க பிரஜையின் பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து மற்றும் இருதய பகுதிகளுக்கு அலுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இது கொலை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கருப்பின அமெரிக்க பிரஜை பொலிஸாரினால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ளன.

இதனால் 40 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க், சிக்காகோ, பில்லர்டெல்பியா மற்றும் லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களில் கலகம் அடக்கும் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ள.

பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டதுடன் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நகரங்களில் பொலிஸாரின் வாகனங்கள் எரியூட்டப்பட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வரலாற்றில் அமெரிக்க பெரும் பின்னடவை சந்தித்துக் கொண்டிருப்பதாக கடுமையான விமர்சனங்களை ட்ரம்ப் எதிர்கொண்டிருக்கிறார்.

இனத்துவேசத்தை அவர் விதைத்துக் கொண்டிருப்பதாகவும், போராட்டத்தை சரியான விதத்தில் கையாளவில்லை என்றும் பலத்த குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top