சிறுகதை எழுத்தாளர், கலாபூஷணம்
யூ.எல். ஆதம்வாவா
இன்று அதிகாலை காலமானார்



நாடறிந்த சிறுகதை எழுத்தாளரும், கலாபூசணமும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான யூ.எல்.ஆதம்பாவா இன்று (02) அதிகாலை காலமானார்
இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜி ஊன்.
இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவந்த மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக இவர் திகழ்ந்து வந்தார்.
 “காணிக்கை“ என்ற இவரது சிறு கதைத் தொகுதி 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2007 ஆம் ஆண்டில் “சாணையோடு வந்தது.....“ என்ற இவரது இரண்டாவது சிறு கதைத் தொகுதி வெளிவந்தது.
நாங்கள் மனித இனம்' - உருவகக் கதைத்தொகுதி (1991 நவம்பர்)
'காணிக்கை - சிறுகதைத்தொகுதி' (1997 ஜனவரி)
'பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம்' - இரங்கல் கவிதைத் தொகுதி (2003)
1939.06.15ல் பிறந்த இவர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகவும், பகுதி தலைவராகவும் கடமையாற்றினார்.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் தமிழ்மொழி ஆசானாக இவர் பணிபுரிந்த காலத்தில் சுமார் 10 ஆண்டுகள் 'ஸாஹிறா' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார்.
1999இல் இலங்கை அரசு 'கலாபூஷணம்' விருது வழங்கி இவரை கௌரவித்தது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top