நாயின் வாயில் டேப் சுற்றி கொடுமை
நாய்
விடாமல் குரைத்ததால்
அதன் வாயில்
டேப்பை சுற்றி
கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.
சமீபத்தில் இந்திய நாட்டிலுள்ள கேரளாவில் கர்ப்பிணி
யானை ஒன்று
வெடிபொருள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்டதால் வாயில்
படுகாயம் அடைந்து
பரிதாபமாக உயிர்
விட்டது. அதன்
வயிற்றில் இருந்த
குட்டியும் உயிர் விட்டது. இச்சம்பவம் பலரையும் கவலை அடையச்செய்தது.
இந்நிலையில்
நாய் ஒன்றின்
வாயினை டேப்பினால்
கட்டி கேரளாவின்
திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர்
கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இரண்டு
வாரங்களுக்கு முன் திருச்சூர் விலங்குகள் நல
அமைப்புக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில்
ஒல்லூர் பகுதியில்
நாய் ஒன்று
வாயில் டேப்
ஒட்டப்பட்டதால் அது உணவு உண்ண முடியாமலும்,
நீர் அருந்த
முடியாமலும் தவிப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து
விலங்குகள் நல வாரிய அமைப்பினர் நாயைத்
தேடி அலைந்துள்ளனர்.
பல நாட்கள்
கழித்து தான்
தற்போது தான்
நாய் கண்டுபிடிக்கப்பட்டது.
நாயின் வாயைச்
சுற்றி பல
அடுக்குகளாக டேப் பலமாக ஒட்டப்பட்டிருந்தது. வாயை திறக்க முடியாத அளவுக்கு
ஒட்டப்பட்டதால் உண்ண முடியாமலும், நீர் அருந்த
முடியாமலும் அது தவித்து வந்துள்ளது.
டேப்
அழுத்தத்தால் அதன் நாசி எலும்புகள் பாதிப்பு
அடைந்துள்ளன. தோல் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரிய அமைப்பினர் நாயை
மீட்டியதும் அதன் வாயில் ஒட்டப்பட்ட டேப்பை
கழற்றினர். டேப் கழற்றப்பட்டதும் சுமார் 2 லிட்டர்
தண்ணீர் குடித்ததாக
விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
மேலும்
ராமச்சந்திரன் கூறுகையில், ' உணவு, தண்ணீர் இல்லாமல்
நாய்களால் சில
வாரங்கள் வாழ
முடியும். தற்போது
கால்நடை மருத்துவமனையில்
அதற்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உடல்நிலையில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து விலங்குகளை
துன்புறுத்தாதீர்கள்' இவ்வாறு கூறியுள்ளார்.
நாய்
குரைத்தது தொந்தரவாக
இருந்ததால் யாரோ அதன் வாயில் டேப்
ஒட்டியதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.