கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு
அமெரிக்காவில் மட்டும்
1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பலி
உலகம்
முழுவதும் கொரோனா
வைரஸ் தாக்குதலுக்கு
5 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் பலி எண்ணிக்கை
1 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்தது.
சீனாவில்
ஹூபேய் மாகாணம்
வுகான் நகரில்
கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம்
கொரோனா வைரஸ்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்
தற்போது உலகின்
213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித
பேரழிவை ஏற்படுத்தி
வருகிறது.
இந்த
வைரசுக்கு தடுப்பு
மருந்து கண்டுபிடிக்க
விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் கொரோனாவின்
தாக்கம் நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டே
செல்கிறது.
இந்நிலையில்,
உலகம் முழுவதும்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
5 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய
நிலவரப்படி, 1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 325 பேருக்கு
வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசால்
பாதிக்கப்பட்டவர்களில் 43 லட்சத்து 63 ஆயிரத்து
112 பேர் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில்
58 ஆயிரத்து 836 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில்
இருந்து 62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ்
தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 63 பேர்
உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு
அதிக உயிரிழப்பை
சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா
- 1,32,101
பிரேசில்
- 63,254
இங்கிலாந்து
- 44,131
ஸ்பெயின்
- 28,385
இத்தாலி
- 34,833
மெக்சிகோ
- 29,189
பிரான்ஸ்
- 29,883
இந்தியா
- 18,213
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.