போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு
அதிகாரியை பிடிக்க மக்களிடம் உதவி
பொலிஸ்
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த
அதிகாரியொருவரை கைது செய்வது தொடர்பில், பொதுமக்களின்
உதவியை பொலிஸ்
தலைமையகம் நாடியுள்ளது.
பொலிஸ்
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் இடம்பெற்று வந்த
சட்டவிரோத போதைப்பொருள்
வர்த்தக நடவடிக்கை
தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய,
குறித்த நபரை
கைது செய்ய
உதவுமாறு பொலிஸார்
உதவி கோரியுள்ளனர்.
பெயர்:
வெஹெரவத்த கங்காணம்லாகே
சமன் வசந்த
குமார
முகவரி:
189, கிரிகத்த, வெலிவேரிய
வயது:
49
பொலிஸ்
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பொலிஸ் பரிசோதகராக
(IP) கடமையாற்றி வந்த குறித்த நபர், தற்போது
தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த
நபர் பற்றிய
தகவல்கள் தெரிந்தவர்கள்
பின்வரும் தொலைபேசி
இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸார் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
071-8591767
011-2422176
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.