2020.07.08 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01) சர்வதேச உத்தியோகத்தர்களுக்கான
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை
உத்தியோகத்தர் கல்லூரியில் பயிற்சிப் பாடநெறிக்கான வாய்ப்பு
வழங்கல்
இலங்கை
முப்படையினர் மற்றும் பொலிஸ் கனிஷ்ட சேவை
உத்தியோகத்தர்களுக்கும் அரச நிறுவனங்களிலுள்ள
நிறைவேற்று அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கும் பாதுகாப்புச்
சேவைகள் கட்டளை
மற்றும் பதவிநிலை
உத்தியோகத்தர்கள் கல்லூரி (Defence Services command and staff college) பாடநெறிகளைப் பயில்வதற்காக
வெளிநாட்டு அலுவலர்களுக்கு 2009 ஆம் ஆண்டு தொடக்கம்
கட்டணம் இல்லாமலும்
கட்டண அடிப்படையிலும்
வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய ஆசியா,
மத்திய கிழக்கு,
ஐரோப்பா மற்றும்
ஆபிரிக்கா நாடுகளைச்
சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு
கட்டண அடிப்படையில்
12 வாய்ப்புகளும் கட்டணம் இல்லாத அடிப்படையில் 30 வாய்ப்புகளும்
இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பாடநெறிகளைப்
பயில்வதற்கு 2021 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கப்பூருக்கு
கட்டணமின்றி ஒரு அனுமதியும் கட்டண அடிப்படையில்
ஒரு அனுமதியும்
வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02) இலங்கைச் சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட
பீடி இலைகளை
அகற்றல்
முறையான
அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பீடி
இலைத்தொகைகள் இலங்கைச் சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்டு
முறையான சுங்க
ஒழுங்கு விதிகளைப்
பின்பற்றி பொது
ஏல விற்பனைக்கு
விடுவது இதுவரை
மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனாலும், குறித்த பீடி
இலைகளைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படும்
பீடிப் பாவனையால்
நபர்களின் ஆரோக்கியத்திற்கு
தீங்கு விளைவிப்பதைக்
கருத்தில் கொண்டு,
எதிர்வரும் காலத்தில் இலங்கைச் சுங்கத்தால் கையகப்படுத்தி
அரசவுடமையாக்கப்படும் பீடி இலைத்
தொகைகளை அழிப்பதற்கு
அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
03) தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளை இலங்கை
ஜனநாயக சோசலிசக்
குடியரசு மற்றும்
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே ஒப்படைத்தலுக்காக
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம்
இலங்கையில்
குற்றமிழைத்துத் தண்டனை நிறைவேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்படும்
வேற்று நாட்டுப்
பிரஜைகளுக்கு குற்றவாளியின் நாட்டில் தண்டனையை அனுபவிக்கவும்,
வெளிநாடொன்றில் அவ்வாறு தண்டனைக்கு ஆளாகிய இலங்கையருக்கு
குறித்த தண்டனையை
இலங்கையில் அனுபவிக்கவும், ஏற்புடைய வகையில் இலங்கைக்கு
ஒப்படைத்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் 1995 ஆம்
ஆண்டு 5 ஆம்
இலக்க குற்றவாளிகள்
ஒப்படைத்தல் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்ட
ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக
இலங்கை ஏனைய
நாடுகளுடன் உடன்படிக்கையொன்று எட்டப்பட
வேண்டும். அதற்கமைய
இலங்கையிலும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசிலும் தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளவர்களில் பயங்கரவாதச் செயல்
மற்றும் போதைப்பொருள்
கடத்தல் தொடர்பாக
குற்றமிழைத்து தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் தவிர்ந்த
ஏனைய குற்றவாளிகள்
இரு நாடுகளுக்குமிடையே
பரிமாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில்
கைச்சாத்திடுவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள்,
மனித உரிமைகள்
மற்றும் சட்ட
மறுசீரமைப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட
பிரேரணை அமைச்சரவையால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
04) றிடுக்சினிமெப் ஊசிமருந்து
100mg/10ml வயல்ஸ் 6,000 றிடுக்சினிமெப் ஊசிமருந்து
500mg/50ml வயல்ஸ் 6,500 விநியோகத்திற்கான விலைமனுக் கோரல்
சில
புற்றுநோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் றிடுக்சினிமெப் ஊசிமருந்து
100mg/10ml வயல்ஸ் 6,000 றிடுக்சினிமெப் ஊசிமருந்து
500mg/50ml வயல்ஸ் 6,500 கொள்வனவுக்கான விலைமனுக்
கோரல், அமைச்சரவையால்
நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக்
குழுவின் பரிந்துரைகளுக்கமைய
இந்தியாவின் M/s pharmaceuticals Limited இற்கு மொத்தச்
செலவு 739,720.00 டொலர்கள் தொகைக்கு வழங்குவதற்கு சுகாதார
மற்றும் சுதேச
மருத்துவ அமைச்சரால்
சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை அமைச்சரவை
அங்கீகரித்துள்ளது.
05) கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத கற்கை
நிறுவனத்தை பூரணமான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துதல்
கம்பஹா
விக்கிரமாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனம் தற்போது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் களனிப்
பல்கலைக்கழகத்துடன் இணைந்த உயர்கல்வி
நிறுவனமாக நடாத்தப்பட்டு
வருவதுடன், இங்கு ஆயுள்வேத மற்றும் அதனுடன்
இணைந்த கற்கைகளின்
பட்டம் மற்றும்
பட்டப்பின் படிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. 'நாட்டைக்
கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கமைய
குறித்த கற்கை
நிறுவனம் பூரண
பல்கலைக்கழகத் தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு
அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய எமது
நாடு பாரம்பரிய
உள்ளுர் மருத்துவக்
கற்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடாத்திச் செல்லும்
பல்கலைக்கழகமாக கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத கற்கை
நிறுவனத்தைத் தரமுயர்த்துவதற்கு உயர்கல்வி,
தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் அமைச்சர் சமர்ப்பித்த
பிரரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
06) இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முன்மொழியப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி (படிமுறை 2)
கட்டுமான ஒப்பந்தம்
வழங்கல்
இலங்கை
வயம்ப பல்கலைக்கழகத்தின்
தொழில்நுட்ப பீடத்தின் முன்மொழியப்பட்டுள்ள
கட்டிடத்தொகுதி (படிமுறை 2) கட்டுமான ஒப்பந்தம் அமைச்சரவையால்
நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக்
குழுவின் பரிந்துரையின்
பிரகாரம் ரூபா
1560.36 மில்லியன்கள் (பெறுமதி சேர்
வரி இல்லாமல்)
தொகைக்கு குருணாகலிலுள்ள
'வரையறுக்கப்பட்ட சதுட பில்டேர்ஸ் (தனியார்) கம்பனிக்கு'
வழங்குவதற்காக உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள்
அமைச்சர் சமர்ப்பித்த
பிரரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
07) இரத்மலானை தொழில்நுட்பவியல்
கல்லூரிக்கான விடுதி, வேலைத்தளம் மற்றும் சிற்றுண்டிச்சாலைக்
கட்டுமாணம்
ரூபா
927.34 மில்லியன்கள் செலவில் இரத்மலானை
தொழில்நுட்பவியல் கல்லூரிக்கான விடுதி, வேலைத்தளம் மற்றும்
சிற்றுண்டிச்சாலைக்கான வேறுவேறான கட்டிடங்கள்
03 இன் கட்டுமாணத்திற்காக
2017 ஆம் ஆண்டு
ஜனவரி மாதம்
01 ஆம் திகதி
அமைச்சரவை அங்கீகாரம்
கிடைத்துள்ளது. ஆனாலும் இக்கட்டுமாணத்திற்காக
முன்மொழியப்பட்ட நிலம், வேரஸ்ஸ ஆற்றிற்கு மிகவும்
அண்டிய சதுப்பு
நிலமாக இருத்தல்,
எதிர்காலத் தேவைகளுக்கு நிலத்தை பயனுள்ள வகையில்
பயன்படுத்தும் வகையிலும் 03 கட்டிடங்களும்
வேறு வேறாக
பயிலிங் இடப்பட
வேண்டியிருத்தல் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு
ஆரம்ப மதிப்பீட்டு
எல்லைக்குள் 03 கட்டிடங்களுக்குப் பதிலாக
06 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தை அமைப்பதற்கு
உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் அமைச்சர்
சமர்ப்பித்த பிரரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
08) உருஹூணுப் பல்கலைக்கழகம் மற்றும் சீனா
கயிஷோ கற்கைகள்
நிறுவனத்திற்கும் இடையேயான கல்வி மற்றும் ஆராய்ச்சி
தொடர்பான கூட்டிணைப்பு
புரிந்துணர்வு உடன்படிக்கை
உருஹூணுப்
பல்கலைக்கழகம் மற்றும் சீனா கயிஷோ கற்கைகள்
நிறுவனத்திற்கும் (Guizhou Academy of
Science) இடையேயான கல்வி மற்றும்
ஆராய்ச்சிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பினருக்கும் இடையே அடையாளங் காணப்படும் தகவல்களைப்
பரிமாற்றிக் கொள்ளல், ஆய்வுகளுக்கான நிதியொதுக்குதல் தொடர்பாக
ஒத்துழைப்புடன் செயற்படுவதற்காக ஒன்றிணைந்த
ஆரம்ப பட்டப்படிப்பு
மற்றும் பட்டப்பின்
படிப்புக் கற்கை
நெறிகளை ஆரம்பிப்பதற்கும்
எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய குறித்த
புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக
உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் அமைச்சர்
சமர்ப்பித்த பிரரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
09) கிராமிய பாலம் அமைத்தல் கருத்திட்டம்
- கிராமிய பாலம்
அமைத்தல் படிமுறை
ll (பாலம் 618) படிமுறை lll (பாலம் 480)
கிராமிய
பாலம் அமைத்தல்
படிமுறை ll இன் கீழ் ஐக்கிய இராச்சியத்தின்
கடன் நிதி
மூலம் பாலம்
537 உம், குறித்த
கருத்திட்டத்தின் படிமுறை lll இன் கீழ் நெதர்லாந்து
கடன் நிதி
மூலம் பாலம்
463 உம் நிர்மாணிப்பதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் 2017 ஆம்
ஆண்டு ஏற்பட்ட
வெள்ளப் பெருக்கால்
பாதிக்கப்பட்ட கிராமியப் பாலங்கள் உள்ளிட்ட பாலங்கள்
81 மற்றும் 27 உம் ஆரம்ப தரப்படுத்தலின் அடிப்படையில்
நிர்மாணிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால்
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய திருத்த வேலைகளால்
ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களின் விலகல்களைக்
கருத்திற்கொண்டு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட
நிரந்தர பெறுகைக்
குழுவின் பரிந்துரைக்கமைய
கிராமிய பாலம்
அமைத்தல் படிமுறை
ll பிரித்தானிய பவுண் 100 மில்லியன்கள் ஆன ஆரம்ப
ஒப்பந்தப் பெறுமதி
பிரித்தானியா பவுண் 114.19 மில்லியன்களாகவும்,
குறித்த கருத்திட்டப்
படிமுறை lll இன் யூரோ 105 மில்லியன்கள் ஒப்பந்தப்
பெறுமதி யூரோ
105.25 மில்லியன்களாக திருத்துவதற்காக அரச
நிர்வாக, உள்நாட்டலுவல்கள்
மற்றும் உள்ளுராட்சி
அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
10) இரசாயன உர விலைமனுக் கோரல்
- 2020 பெரும்போகச் செய்கை (ஆகஸ்ட்
வழங்கல்)
2020 ஆகஸ்ட் மாத பெரும்போகச் செய்கைக்காக
வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி (லக்
உரம்) மற்றும்
கொமர்ஷல் உரக்
கம்பனி (கொமர்ஷல்
உரம்), போன்ற
கம்பனிகளுக்கு உரக்கொள்வனவுக்காக சர்வதேச போட்டி விலைமனு
கோரப்பட்டுள்ளது. குறித்த விலை மனு தொடர்பாக
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவால்
வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உர விநியோக
விலைமனு வழங்குவதற்காக
மஹாவலி, விவசாய,
நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரால்
சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை
செயற்படுத்தல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
• யூரியா
(கிறனியூலர்) மெட்றிக் டொன் 60,000 10-
5% மெட்றிக் டொன் 1 அமெரிக்க டொலர் 241.90 வீதம்
மிட்கல்ஸ் இன்டர்நெசனல்
லிமிட்டட் இனால்
• டிரபல்
சுப்பர் பொஸ்பேற்
மெட்றிக் டொன்
15,000 10- 5% மெட்றிக் டொன் 1 அமெரிக்க
டொலர் 239.00 வீதம் சுவிஸ் சிங்கப்பூர் ஓவசீஸ்
என்டர்பிரைசஸ் பிரைவட் லிமிட்டட் இனால்
11) 2020 மார்ச் மாதம் தொடக்கம் மே
மாதம் வரையான
மின் கட்டணப்
பட்டியல் கொடுப்பனவுக்கான
மின்சார நுகர்வோருக்கான
மானியம் வழங்கல்
கொவிட்
19 தொற்று நிலைமையால்
2020 மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம்
வரையான காலப்பகுதியில்
நாட்டு மக்கள்
தமது வீட்டிலேயே
தங்கியிருக்க வேண்டியேற்பட்டதால் பல துறைகளில் தொழிலில்
ஈடுபட்டவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. இந்நிலைமையை கருத்தில்
கொண்டு மின்
கட்டணப் பட்டியலுக்கு
வழங்க வேண்டிய
மானியம் தொடர்பான
முன்மொழிவுகள் உள்ளடங்கிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பதற்காக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
குழுவொன்றை நியமித்துள்ளார். அதற்கமைய குறித்த குழுவால்
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவைக்குச்
சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள
விடயங்களை திறைசேரி
அதிகாரிகளுடன் மேலும் ஆராய்ந்து மக்களுக்கு வழங்கக்கூடிய
மானியம் தொடர்பான
சிபாரிசுகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு
நிதி, பொருளாதாரம்
மற்றும் கொள்கை
வகுப்பு அமைச்சரான
பிரதமரிடம் வேண்டிக்கொள்வதற்கு அமைச்சரவை
தீர்மானித்துள்ளது.
0 comments:
Post a Comment