குழந்தைக்கு வித்தியாசமாகப்
பெயரிட்ட உசைன் போல்ட்!
மின்னல்
வேக மனிதர்
என்று புகழப்படும்
உசைன் போல்ட்,
தனது பெண்
குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார்.
ஜமைக்காவைச்
சேர்ந்த பிரபல
ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ.
ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை
செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம்,
4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை
படைத்து தன்னிகரற்ற
தடகள வீரராக
உள்ளார். ஒலிம்பிக்ஸ்
போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2008, 2012, 2016 என மூன்று
ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ.
ஓட்டம் ஆகிய
இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய
சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப்
பிறகு ஓய்வு
அறிவிப்பை வெளியிட்டார்.
உசைன்
போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த
மே 17 அன்று
பெண் குழந்தை
பிறந்தது. உசைன்
போல்ட் தந்தையானது
குறித்த தகவலை
ஜமைக்கா பிரதமர்
ஆண்ட்ரூ ஹோல்னஸ்,
தனது ட்விட்டர்
வழியாகத் தெரிவித்தார்.
உசைன் போல்ட்
– காசி பென்னட்
ஆகிய இருவரும்
2014 முதல் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில்
தனது குழந்தைக்கு
ஒலிம்பியா லைட்னிங்
என்று பெயர்
சூட்டியுள்ளார் போல்ட். குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.