இணையை கவர மஞ்சள் நிறத்திற்கு
மாறிய தவளைகள்
இந்தியாவில் மழைநீர் குளம் ஒன்றில் அதிக எண்ணிக்கையில்
மஞ்சள் நிறத்திலான ஆண் தவளைகள் விளையாடி மகிழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி
வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர்
பக்கத்தில், 'நீங்கள் எப்போதாவது இவ்வளவு மஞ்சள் தவளைகளை
பார்த்திருக்கிறீர்களா? இவையனைத்தும் நரசிக்பூரில் காணப்படும் இந்திய
ஆண் தவளைகள். மழைக்காலத்தில் தனது இணையை கவர்வதற்காக அவை மஞ்சள் நிறமாக
மாறியுள்ளன. அவை எப்படி மழையை அனுபவிக்கின்றன என்பதை பாருங்கள்' என பதிவிட்டிருந்தார்.
வழக்கமாக ஆண் தவளைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில்
இருப்பதில்லை. இனப்பெருக்க காலத்தில் தங்களது பெண் இணையை கவர்வதற்காக இதுபோன்று
மாற்றி கொள்கின்றன. இயற்கையான இந்த நிறமாற்றம் மழைக்காலத்தில் நிகழ்கிறது.
வீடியோவை பகிர்ந்த பின்னர் மஞ்சள் நிற இந்திய ஆண் தவளையின் படத்தை கஸ்வான்
வெளியிட்டார்.
இது இனச்சேர்க்கை பருவத்தில் எப்படி இருக்கும் என்பதைப்
பற்றிய ஒரு பார்வையை நெட்டிசன்களுக்கு அளிக்கிறது. இந்த நிகழ்வுக்கும் கொரோனா
தொற்று அல்லது வெட்டுக்கிளி தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இதுபோன்று நடந்து கொள்வது மிகவும் இயல்பானது. ஆனால் பிரச்னை
என்னவென்றால் நிறைய ஆண்கள் தங்கள் இணையை பெறுவார்களா என்பதுதான். உண்மையான போட்டி' எனவும் கூறியுள்ளார்.
சமூகவலைதளமான டுவிட்டரில் கஸ்வானின் வீடியோவை இதுவரை சுமார்
65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரசித்து பார்த்ததுடன், மஞ்சள் நிற. தவளையை முதலில் பார்த்த அனுபவங்களையும்
நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்
0 comments:
Post a Comment