உலகின் மிகவும் வயதான
 பூனை மரணம்
  
உலகில் தற்போது அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த பூனை தனது 31 வயதில் மரணம் அடைந்தது. இதனால் உரிமையாளர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் எக்ஸ்டர் நகரை சேர்ந்தவர் மைக்கில் ஹெரிட்டேஜ். தற்போது 52 வயது நிரம்பிய இவருக்கு 1988 ஆம் ஆண்டு தனது 20-வது வயது பிறந்த நாளின் போது அவரது நண்பர் பூனைக்குட்டி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

ரூபில் என பெயர் வைத்து அந்த ஆண் ஹெரிட்டேஜ் வளர்த்து வந்துள்ளார். மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த செல்லப்பிராணி ரூபிலுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 31 வயது பிறந்துள்ளது.

 பூனையின் இந்த வயது (31) என்பது மனிதனின் 150 வயதுக்கு சமம் ஆகும். சராசரியாக பூனையின் வாழ்நாள் 15 முதல் 18 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் ரூபில் 31 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்துள்ளது.

தற்போதைய உலகில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த பூனையாக ரூபில் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பூனை ரூபில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனவும், அது வயது முதிர்வு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் பூனையின் உரிமையாளர் மைக்கில் ஹெரிட்டேஜ் தெரிவித்துள்ளார்.

ரூபில் உயிரிழந்ததால் அதன் உரிமையாளர்களான ஹெரிட்டேஜ் மற்றும் அவரது கணவர் மைக்கில் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இதுவரை வரை உலகில் நீண்ட நாட்கள் வாழ்ந்த பூனை என்ற சாதனையை கிரீமி பஃப் என்ற பூனை பெற்றுள்ளது.

அந்த பூனை 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிறந்து 38 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து 2005 ஆகஸ்ட் 6-ம் தேதி உயிரிழந்தது. இந்த பூனை தான் உலகிலேயே அதிக நாட்கள் வாழ்ந்த பூனை என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top