பிரதமரை மெய்சிலிர்க்க வைத்த
10
வயது சிறுமியின் கடிதம்
மாத்தளையில்
வசிக்கும் மர்சுக்
மோரிட்டா சாரா
என்ற 10 வயது
சிறுமி ஒருவர்
பிரதமருக்கு எழுதிய கடிதம் அவரை மெய்சிலிர்க்க
வைத்துள்ளது.
அண்மையில்
86 வயதுடைய வயோதிபர் ஒருவர் 5000 ரூபாய் பணத்தை
கொரோனா நிதியத்திற்கு
வழங்கிய செய்தியை
தனது தந்தை
ஊடாக தெரிந்துக்
கொண்டதாகவும், தானும் தனது சேகரிப்பு பணத்தை
கொரோனா நிதியத்திற்கு
வழங்க விரும்புவதாகவும்,
தனது தந்தையின்
தாய் நாட்டை
தானும் நேசிப்பதாகவும்
கூறி குறித்த
சிறுமி பிரதமருக்கு
கடிதம் ஒன்றை
அனுப்பி வைத்துள்ளார்.
அதற்கு பதில்
கடிதம் எழுதிய
பிரதமர்
அன்பிற்குரிய
மர்சுக் மகள்,
நீங்கள்
எனக்கு அனுப்பிய
சிறிய கடிதம்
எனக்குகிடைத்தது. அதனை வாசித்து முடிக்கும் போது
என் கண்களில்
ஆனந்த கண்ணீர்
வந்தது. அடுத்தவர்களின்
துக்கத்தை பார்த்து
மனவருத்தமடையும் இதயம் கொண்ட, நாட்டை நேசிக்கும்
உங்களை போன்ற
சிறுவர்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ளவதனை
அறிந்து கொண்ட
மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.
மர்சுக்
மகள், நீண்ட
காலமாக காணப்பட்ட
பயங்கரவாத அச்சுறுத்தலை
நீக்கி, எவ்வித
பயம் சந்தேகமின்றி
வாழ்க்கையை வாழ கூடிய நாடு ஒன்றை
வழங்க எங்களால்
முடிந்தது. அதேபோல் உலகின் பல நாடுகள்
கொடிய கொரோனா
தொற்றிற்கு மத்தியில் தங்கள் நாட்டு மக்களை
காப்பாற்ற முடியாத
நிலையில் இருந்தாலும்
எங்கள் குடிமக்களை
காப்பாற்ற எங்களால்
முடிந்தது.
இந்த
அனைத்து சிக்கல்களையும்
வெற்றி கொண்டு
நாட்டை பாதுகாத்து
முன்னோக்கி செல்வதற்கு, 86 வயதான முதியவர் மற்றும்
உங்களை போன்ற
சிறுவர்கள் வழங்கிய பாரிய சக்தியே காரணமாகும்.
உங்கள் நிதி
உதவி சிறிதாக
இருந்தாலும் அதன் மூலம் எங்களுக்கு மேலும்
மேலும் தாய்
நாட்டிற்காக அர்ப்பணிக்க வழங்கும் தைரியத்தை மதிப்பிட
முடியாது. அது
குறித்து மகளுக்கு
மிகவும் நன்றி.
மர்சுக்
மகள், உங்களால்
அனுப்பப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்கு அனுப்புவதற்காக
ஜனாதிபதி மாமாவிடம்
வழங்குகின்றேன். உங்களை போன்று நாட்டை நேசிக்கும்
சிறுவர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.
நீங்கள் நன்றாக
படித்து நாட்டின்
எதிர்காலத்தை பொறுப்பேற்க தயாராக வேண்டும்.....
கடவுள்
உங்களை ஆசிரிவதிப்பார்
பிரதமர்
மாமா
மஹிந்த
ராஜபக்ஸ
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.