முஸ்லிம் எம்.பிக்களின் தரவரிசையும்
நாடாளுமன்றத்தில் பங்கு பற்றிய
( TIMES ) நேரங்களும்
தரவுகள் பேசுகின்றன
முஸ்லிம்
மக்களின் வாக்குகளைப்
பெற்று நாடாளுமன்ற
உறுப்பினர் என்ற அமானிதத்தைப் பெற்றிருக்கும் எமது
முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் எவ்வாறு அந்தப் பதவியை முஸ்லிம்
சமூகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பாவிக்கிறார்கள்
என்பதை கீழே
காட்டப்படும் தரவுகளைகொண்டு வாக்களித்த மக்களாகிய நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
எமது
திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில்
எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்கள்?
பாராளுமன்றத்தில்
எத்தனை ( TIMES ) தடவைகள் கலந்து கொண்டிருந்தார்கள்? என்பதை
அவதானியுங்கள்.
இலங்கையின்
எட்டாவது நாடாளுமன்ற
தரப்படுத்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில்.
முஸ்லிம் உறுப்பினர்களாக
இருந்தவர்கள் நாடாளுமன்றத்தில் பங்கு கொண்ட தடவைகளும்
அவர்களின் தரவரிசைகளும்
உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
சிறந்த
நாடாளுமன்ற செயற்பாட்டு உறுப்பினர் தெரிவு உரிமைகள்
மற்றும் பிரதிநிதித்துவம்,
இயற்கை வளங்கள்
மற்றும் சுற்றுச்சூழல்
, நீதி, பாதுகாப்பு
மற்றும் பொது
ஒழுங்கு என
பல்வேறு பிரிவுகளில்
மதிப்பெண் வழங்கப்பட்டே
இவர்கள் தரவரிசைப்படி தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள்
விடுதலை முன்னணியின்
தலைவர் அனுரகுமார
திசாநாயக்கா நாடாளுமன்றத்தில்
827 தடவைகள் பங்கு கொண்டுள்ளதுடன் தரவரிசையில் முதலாம்
இடத்தில் உள்ளார்.
இத்தெரிவின்
உத்தியோகபூர்வ முடிவுகள் மற்றும் தரவுகள் manthri.lk எனும் இணையத்தளத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Manthri.lk இணையத்தயளம் கொழும்பை
ஸ்தலமாகக் கொண்டு
இயங்கி வரும்
அறிவுஜீவிகள் குழுமமொன்றாகிய வெரிடே ரிசேர்ச் ஆய்வு
அமைப்பின் ஒரு
உருவாக்கம் ஆகும். பொருளாதார, அரசியல், சட்டத்துறை,
ஊடகம் போன்ற
அம்சங்கள் தொடர்பான
ஆய்வுகளை மேற்கொண்டு
வரும் வெரிடே
ரிசேர்ச் அமைப்பின்
Manthri.lk முன்னெடுப்பிற்காக இணையத்தள மேம்பாடு
உட்பட்ட பல்வேறுபட்ட
துறைசார் செயற்பாடகளில்
ஈடுபட்டு வரும்
சர்வதேச புகழ்பெற்ற
ஸாபேரியன் அமைப்பின்
ஒத்துழைப்பையும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதோ
முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் தரவரிசையும் அவர்கள் நாடாளுமன்றத்தில் பங்குகொண்ட தடவைகளும்
உறுப்பினரின் பெயர்
|
நாடாளுமன்றத்தில் பங்குகொண்ட தடவைகள்
|
தரவரிசை
|
முஜிபுர் ரஹ்மான்
|
235
|
23
|
ரவூப் ஹக்கீம்
|
232
|
32
|
ரிஷாத் பதியுதீன்
|
188
|
52
|
எஸ்.எம்.மரிக்கார்
|
30
|
55
|
கபீர் ஹாஸிம்
|
180
|
60
|
அப்துல்லாஹ் மஹ்றூப்
|
109
|
61
|
இஷாக் ரஹுமான்
|
190
|
62
|
பைஸர் முஸ்தபா
|
253
|
63
|
அலிஸாஹிர் மெளலானா
|
100
|
98
|
முஹம்மத் நவவி
|
80
|
106
|
அமீர் அலி சிஹாப்தீன்
|
64
|
137
|
இம்ரான் மஹ்றூப்
|
75
|
142
|
எம்.ஐ.எம்.மன்சூர்
|
53
|
150
|
பைஸல் காசிம்
|
97
|
153
|
கே.காதர் மஸ்தான்
|
56
|
156
|
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
|
44
|
158
|
எச்.எம்.எம்.ஹரிஸ்
|
55
|
159
|
அப்துல் ஹலீம்
|
76
|
166
|
ஏ.எச்.எம்.பெளஸி
|
30
|
167
|
எம்.எச்.எம்.சல்மான்
|
89
|
171
|
முஹம்மது நசீர்
|
18
|
198
|
எம்.எஸ்.தெளபீக்
|
19
|
221
|
எஸ்.எம்.எம்.இஸ்மாயில்
|
04
|
225
|
ஏ.ஆர். ஹபீஸ்
|
07
|
229
|
0 comments:
Post a Comment