மக்களை ஏமாற்றுவதற்கு
ஐந்து வருடங்களுக்கு முன் நடத்திய
கல்முனை நகர அபிவிருத்தி என்ற
ஏமாற்றுக் கூட்டங்களில் இதுவும்
ஒன்று
கல்முனை
புதிய நகர
அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம்
ஒன்று 2015 ஆம் ஆண்டு 13 ஆம்
திகதி (2015.09.13) ஞாயிற்றுக்கிழமை மாலை
கல்முனை மாநகர
சபை முதல்வர்
செயலகத்தில் நடைபெற்றது.
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அன்று நகர திட்டமிடல்,
நீர் வழங்கல்
அமைச்சர் பதவி வகித்தவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்
இடம்பெற்ற இக்கூட்டத்தில்
நகர அபிவிருத்தி
அதிகார சபையினால்
தயாரிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான
வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக
ஆராயப்பட்டது.
நகர
திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உதவிச்
செயலாளர் பொறியியலாளர்
ரமேஷ் கல்முனை
புதிய நகர
அபிவிருத்தித் திட்டத்தின் தொழில் நுட்ப விடயங்கள்
குறித்து தெளிவுபடுத்தினார்.
இதனைத்
தொடர்ந்து திறந்த
கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திணைக்களத் தலைவர்கள்
மற்றும் அரசியல்
பிரமுகர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது
முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக
எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சின் உயர்
அதிகாரிகள் கல்முனைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை
மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக அன்று பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற
உறுப்பினர்களாக பதவியில் இருந்த எம்.ஐ.எம்.மன்சூர், அலி
சாஹிர் மௌலானா,
கிழக்கு மாகாண
சபை உறுப்பினராக அன்று பதவியில்
இருந்த ஆரிப்
சம்சுதீன், கல்முனை பிரதி முதல்வராக அன்று இருந்த ஏ.எல்.ஏ.மஜீத்,
மாநகர ஆணையாளர்
ஜே.லியாகத்
அலி உட்பட
மாநகர சபை
உறுப்பினர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் அமைச்சின்
உயர் அதிகாரிகளும்
பிரதேச செயலாளர்கள்
உட்பட திணைக்களங்களின்
தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment