புனித ஹஜ் யாத்திரைக்கு
புதிய சுகாதார நெறிமுறை
இம்முறை உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி
இந்தாண்டு புனித ஹஜ் பயணத்திற்கான புதிய சுகாதார நெறி முறைகளை சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இது உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். கஃபாவைத் தொடுவது தடைசெய்யப்பட்டுள்ளது, வெகுஜன பிரார்த்தனைகளின் போதும், கஃபாவைச் சுற்றும் போதும் ஒன்றரை மீட்டர் தூரத்திலுள்ள சமூக இடைவெளி அமுல்படுத்தப்படும்.
மீனா, முஸ்தலிஃபா மற்றும் அரபா ஆகிய இடங்களில் ஹஜ் தளங்களுக்கான அணுகல் ஜூலை 19ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 02ஆம் திகதி வரை ஹஜ் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 02 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு, அதில் 1,900 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment