மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மாஸ்க் அணிந்து ராணுவ
மருத்துவ மையத்திற்கு சென்ற்ள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியபோதும் பொதுவாக முகமூடி
அணிவதைத் தவிர்த்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமையன்று வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு
ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப்
பணியாளர்களைச் சந்திக்க வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கு
சென்றுள்ளார். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். ட்ரம்ப் முன்பு முகமூடி
அணிய மறுத்து வந்த அவர் ,மற்ற அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டார்,
வைரஸின் பரவலை தடுக்க மாஸ்க்குகளை பயன்படுத்துமாறு உயர்
பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், அமெரிக்காவில் கொரோனாவால் வெள்ளிக்கிழமைக்குள்
கிட்டத்தட்ட 1,34,000 அமெரிக்க
உயிர்கள் பலியான நிலையில், ட்ரம்ப் மட்டுமே அணிய மறுத்தது தலைமைத்துவத்தின் குறைபாட்டைக் காட்டியதாக
விமர்சகர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment