மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்
உயர்தர மாணவனின் இரட்டைக் கண்டுபிடிப்புக்கள்
கைகளை
இயந்திரங்களில் தொடாமல் மனித அதிர்வலை மூலம்
திரவத் தன்மையை
கையில் பெறவும்
அதேவேளை ஒரே
நேரத்தில் தண்ணீரால்
கைகளைக் கழுவிக்
கொள்வதுக்குமான இயந்திரமொன்றை மருதமுனை மாணவரொருவர் கண்டுபிடித்துள்ளார்.
மருதமுனை
அல்-மனார்
மத்தியகல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவு
மாணவன் முஹம்மட் இஸ்மாயில்
பஸ்லான் என்ற
மாணவரே இவற்றைக்
கண்டுபிடித்துள்ளார்.
கை
கழுவும் போது
குழாயையும் அதனோடு பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களையும் மாறிமாறிப் பலரும் தொடுவதனால் கொரோனா
தொற்றுக்கள் வேகமாகப் பரவ வாய்ப்புண்டு.
எனினும்
இவ் இயந்திரத்தின்
மூலம் நூறுவீத பாதுகாப்பு இருப்பதாகக்
கண்டுபிடிப்பாளர் முகம்மட் இஸ்மாயில் பஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.
கை
கழுவும் இயந்திரத்தின்
பக்கத்தில் நின்று கையினை கீழே வைக்கும்
போது கை
கழுவும் திரவியம்
வெளியாகின்றன. திரவியத்தை தேய்த்து முடித்ததும் மீண்டும்
நீர் உள்ள
பகுதியில் கையினை
வைக்கும் போதுநீர்
வெளியேறுகின்றன.
இக்
கண்டுபிடிப்பானது இம்மாணவனின் இரண்டாவது கண்டுபிடிப்பாகும். வீட்டின் அறையினுள் நுழையும் போது
தமது உடலிலுள்ள
அலைத் தெறிப்பினால்
அவ்வறையின் மின் குமிழ்கள் எரிவதும் வெளியேறும்
போதுமின் குமிழ்கள்
அணைவதுமான கண்டுபிடிப்பொன்றினையும்
கடந்த சில
மாதங்களுக்கு முன் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment