கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தின்
அவல நிலையைப் போக்க
வலது குறைந்தோர் அமைப்பின்
தலைவர் முஹம்மத் அஸ்ரப் அன்று நடவடிக்கை
எடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை
கல்முனை
வலது குறைந்தோர்
அமைப்பின் தலைவர்
முஹம்மத் அஸ்ரப்
உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கல்முனை
பஸ்தரிப்பு நிலையத்தின் அவலநிலை தொடர்பாக தெரியப்படுத்தி 2017 ஆம் ஆண்டு கோரிக்கைவிடுத்தையடுத்து அவரின் முயற்சியினால் அன்று பஸ் நிலையம் செப்பனிடப்பட்டது.
முஹம்மத்
அஸ்ரப், கல்முனை
பஸ்தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக கானப்படுகின்றது
என்றும் அதை
செப்பனிட்டு தருமாறும் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு அன்று வழங்கிய கோரிக்கையை ஏற்று
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி
கல்முனை மாநகர
ஆனையாளருக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா விடுத்த
உத்தரவுக்கு ஏற்ப பஸ்தரிப்பு நிலையத்தில் காணப்பட்ட
நீரை அகற்ற
கல் இடப்பட்டு கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தின் அவலநிலை
ஓரளவு நிவர்த்திக்கப்பட்டது.
இவரின்
இந்த வேண்டுகோள்
அடங்கிய கடிதம்
பிரதமர், சுகாதார
அமைச்சர், முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம்,
பிரதி அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸ்
ஆகியோர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
முஹம்மத்
அஸ்ரப் செய்த
இந்த சேவையை
மக்களுக்கு வேளிக்கொனர தெரியாமல் அந்த கற்குவியலுக்கு
மேல் நின்று
புகைப்படம் ஒன்றை எடுத்து அதை அவரது
முக நூலில் அன்று பதிவிட்டிருந்தார்.
அவரின்
உடல் ஊனமுற்றிருந்தாலும்
உள்ளமும் சேவை
செய்யும் மனப்பாங்கும்
ஊனமுற்றிருக்கவில்லை
ஆனால்
இப்பிரதேசத்தில் அதிகம் பேர் உள்ளம் ஊனமுற்றவர்களாகவும்
சோம்பேறிகளாகவும் கானப்படுகின்றனர்
என
முஹம்மத் அஸ்ரபின் செயல்பாட்டை அறிந்து மக்கள் அன்று கருத்துக்கலை வெளியிட்டிருந்ததுடன்
கல்முனை வலது
குறைந்தோர் அமைப்பின் தலைவர் முஹம்மத் அஸ்ரபின்
சேவையைப் பாராட்டியும் இருந்தனர்.
இது கல்முனை மாநகரத்திலுள்ள பஸ் தரிப்பு நிலையம் 2017 ஆண்டு இருந்த அவல நிலையான காட்சி |
இது கல்முனை மாநகரத்திலுள்ள பஸ் தரிப்பு நிலையம் 2017 ஆண்டு இருந்த அவல நிலையான காட்சி |
வலது குறைந்தோர் அமைப்பின் தலைவர் முஹம்மத் அஸ்ரப் பஸ் தரிப்பு நிலையத்தில் செப்பனிட குவிக்கப்பட்டுள்ள கல் குவியலில் நிற்கின்றார். |
0 comments:
Post a Comment