கொரோனாவால் மிக மிக மோசமான
பேரழிவு ஏற்படும்
உலக சுகாதார அமைப்பின்
தலைவர் தெரிவிப்பு
சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
கடைபிடிக்கா விட்டால் கொரோனா வைரஸ்
மிக மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின்
தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறியிருப்பதாவது:
ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம்
கண்டுள்ளன. இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.
அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன்
பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக
உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான
நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment