அம்பாறை மாவட்டத்தின்
அரசியல் அதிகாரம்
முஸ்லிம் காங்கிரஸ் வசம் இருந்தபோது
2015 ஆம் ஆண்டு நவம்பரில் சுட்டிக்காட்டப்பட்டது


  அம்பறை மாவட்ட அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வசம்!

நுரைச்சோலை வீடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்படுமா?


மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு பின்னர் அம்பறை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத் தலைவராக சிறுபான்மையைச் சேர்ந்த அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளமை எமது கட்சிக்கும்மக்களுக்கும் கிடைத்த கௌரவமாகும் என எடுத்த எடுப்பிலேயே பாராட்டுவது கட்சியை நம்பி வாக்களித்த மக்களை ஒரு போதும் திருப்திபடுத்திவிட முடியாது என்பது கட்சியை நம்பி வாக்களித  மக்கள்ளின் கருத்தாகும்.
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் இன்று முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் கிடைக்கப்பெற்றமை கட்சியினதும் தனிப்பட்ட ஒரு நபரின் பெருமையாகப் பேசிக்கொண்டிராமல் இந்த அதிகாரத்தைகொண்டு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு  குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக சவூதி அரேபியாவின் ‘நன்கொடை நிதியத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்படல் வேண்டும்என்பதுதான் கட்சியினுடையதும் அதிகாரம் கிடைக்கப் பெற்றிருப்பவரினதும் தலையாய கடமையுமாகும் எனக் கூறப்படுகின்றது.
இந்த நல்ல காரியத்தை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் செய்வாரா? என கட்சியின் அம்பாறை மாவட்ட ஆரம்பகால (மூத்த போராளிகள்ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களின் நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
=====================================================================
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுநுரைச்சோலை வீட்டுத் திட்டம்சவூதி அரேபியாவின் ‘நன்கொடை நிதியம்’ இதற்காகஇலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 552 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியதுகிட்டத்தட்ட 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள்வைத்தியசாலைசந்தைத் தொகுதிஆண் – பெண் பாடசாலைகள்விளையாட்டு மைதானம்பள்ளிவாசல் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் என்றுஅனைத்தும் உள்ளடங்கிய ஒரு ‘குட்டி நகரம்’ இன்று அந்த குட்டி நகரம் காடு பிடித்துசேதமடைந்துவிலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது நுரைச்சோலை வீட்டுத் திட்டம்இங்குள்ள கட்டிடங்களில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் நியமிக்கபட்டுள்ளார்.  இப்போதுமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களென்றுமுஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மூவர் மட்டுமே உள்ளனர்முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஆளுந்தரப்பில் உள்ளதுமட்டுமன்றிஅம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளதுஎனவேநுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டிய முழுப்பொறுப்பினையும் முஸ்லிம் காங்கிரஸ்தான் முன்னின்று மேற்கொள்ள வேண்டும்அது அந்தக் கட்சியினுடைய கடமையும் பொறுப்புமாகும்.
நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் முஸ்லிம்.காங்கிரஸ் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது எனசில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதுமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்குப் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது,
 ‘நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளதுஎனவேஇது தொடர்பில் சட்ட ரீதியான சில செயற்பாடுகளை முதலில் மேற்கொள்ள வேண்டியுள்ளதுஅதன் பின்னர்நுரைச்சோலையிலுள்ள வீடுகளை நிச்சயமாக உரிய பயனாளிகளுக்கு நாம் பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இன்னும் சில காலம்நுரைச்சோலை வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் இழுத்தடிப்பு நிகழுமானால்பிறகு – அந்த வீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தவே முடியாததொரு நிலை உருவாகி விடும் என மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவேஇவ்விவகாரத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற அதிகாரம் கிடைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேகமாகச் செயற்பட வேண்டும் என்பதே கட்சிக்கு வாக்களித்த மக்களின் விருப்பமாகும்.
எனவேஅம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக சவூதி அரேபியாவின் ‘நன்கொடை நிதியத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பாராஎன மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்துக்கு தீர்வு கண்டு  வீடுகள் உரியவர்களுக்கு சீக்கிரத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டால் மாத்திரமே கட்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூருக்கும் கிடைத்திருக்கும் அரசியல் அதிகாரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்மையும் பெருமையும் உள்ளதே தவிர  மக்களுக்கு விடிவு கிடைப்பதற்கு செயலாற்ற முடியாத பதவிகளால் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே அரசியல் நடுநிலையாளர்களின்  கருத்தாகும்.
அம்பறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக அரசியல் அதிகாரம் பெற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் எவ்வாறு செயலாற்றப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top