மே தினம்
கொழும்பில் மாத்திரம் 17 பேரணிகள்


உலகத் தொழிலாளர் தினமான மே தினம் நாளை முதலாம் திகதி  சர்வதேச ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கொழும்பில் மாத்திரம் மே தினப் பேரணிகள் 17 இடங்களில் இடம்பெறவுள்ளன.
 இதனால், கொழும்பில் விசேட போக்குவரத்து முறை அமுல்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 12 கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளன.  
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெறும்.
 ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.  
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மே தினக் கூட்டம் பி.ஆர்.சி மைதானத்திலும் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள், கிருலப்பனை லலித் அத்துலத் முதலி விளையாட்டு மைதானத்தில் மே தினத்தை நடத்துகின்றன.
இவற்றோடு இணைந்ததாக கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொழிற் சங்கங்களின் 15 மே தினக் கூட்டங்களும் மே தின ஊர்வலங்கள் 17 உம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் இணைந்த மே தின ஊர்வலம் மூன்று பகுதிகளிலிருந்து பிரதான விழா மைதானத்தை வந்தடையவுள்ளன. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கிற்கு முன்பாகவும் கண் ஆஸ்பத்திரி சுற்றுவட்டத்திலிருந்தும் மருதானை காமினி தியேட்டர் சுற்றுவட்டத்திலிருந்தும் ஊர்வலங்கள் ஆரம்பமாகவுள்ளன.  
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலம் கொழும்பு நகர மண்டப சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமாகும் ஜே.வி.பி.யின் மேதின ஊர்வலம், மஹரகம ஜெயசிங்க மண்டப சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
தத்தமது மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்ததுள்ளர்.  

இதனைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் திருகோணமலையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஹட்டன். தலவாக்கலை பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.   ஜனாதிபதியாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெறும் முதலாவது மே தினம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top