45 ஆணடுகளுக்கும்
மேலாக எரிந்து கொண்டிருக்கும்
துர்க்மெனிஸ்தானில் உள்ள நரகத்தின் நுழைவு
வாயில்
துர்க்மெனிஸ்தானின்
அகால் மாகாணத்தில்
தர்வாஷ் கிராமத்தில் பூமியின்
மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும்
ஒரு பெரிய
துளை ஒன்று
கண்டு பிடிக்கபட்டது.
இந்த
துளையை
1971 ஆம் ஆண்டு ரஷ்ய ஆராய்ச்சியாளர்
ஒருவர் கண்டு
பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த
40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீ
ஜூவாலை வெளிப்பட்டு
கொண்டுதான் இருக்கிறது.
இந்த
துளை 70 மீட்டர்
அகலம் உள்ளது.இதன் ஆழம்
20 மீட்டர் ஆகும்.இந்த துளையில் இருந்து
உயர ரக
எரிவாயு வெளிப்படுவதால்
தொடர்ந்து அங்கு
தீ ஜூவாலை
வருவதாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்து உள்ளனர்.உலகில் மிகப்பெரிய அளவில்
இங்கு எரிவாயு
வளம் உள்ளது.
இயற்கையால்
தோற்றுவிக்கபட்ட ஒரு அருமையான காட்சியாக அது
காணபவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.இதை உள்ளூரை
சேர்ந்தவர்கள் ”நரகத்தின் நுழைவு வாயில்” என அழைக்கிறார்கள்.
துர்க்மெனிஸ்தானுக்கு
ஆண்டுதோறும் 50 நாடுகளை சேர்ந்த 12 முதல் 15 ஆயிரம்
வரையிலான சுற்றுலா
பயணிகள் வருகின்றனர்
அவர்கள் இந்த
நரகத்தின் நுழைவுவாயிலை
பார்வையிட்டு செல்கின்றனர்.
https://youtu.be/aDJ8XUghYXw
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.