2070-ஆம் ஆண்டில்
உலக மக்கள் தொகையில்
முஸ்லிம்கள் முதலிடத்தைப்
பெறலாம்
- அமெரிக்காவின் பீவ்
ஆராய்ச்சி மையம்ஆய்வறிக்கையில் தெரிவிப்பு
2070-ஆம்
ஆண்டில் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் முதலிடத்தைப் பெறலாம் என அமெரிக்காவின் பீவ்
ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2050-இல்
உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.
இதுதொடர்பாக,
அமெரிக்காவின் பீவ் ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையை வியாழக்கிழமை
வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த
40 ஆண்டுகளுக்கு, உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள்.
அதே
நேரத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களின் வளர்ச்சி விகிதத்தைவிட, முஸ்லிம்களின்
வளர்ச்சி விகிதம் அதிகமானதாக இருக்கலாம்.
இந்த
நிலை தொடர்ந்தால் 2070-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் முதலிடத்தைப் பெறலாம்
என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,
2050-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில், ஹிந்துக்கள் 3-ஆவது இடத்தில் இருக்கலாம்
என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த
மதத்தையும் பின்பற்றாதவர்கள், தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளனர். 2050-இல் உலக மக்கள்
தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.
2050-ஆம்
ஆண்டில் உலக மக்கள் தொகையில் ஹிந்துக்கள் 14.9 சதவீதத்தை எட்டக் கூடும்.
அதாவது
தற்போதுள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை 100 கோடி என்பது 140 கோடியாக அதிகரிக்கக் கூடும்.
இது உலக அளவில் மூன்றாம் இடமாக இருக்கக் கூடும்.
இதேபோல்,
உலகிலேயே மிக அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட இந்தோனேஷியாவை இந்தியா மிஞ்சக் கூடும். இவ்வாறு
அமெரிக்காவின் பீவ் ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment