நேபாள நில நடுக்கம்
80 மணி நேரத்துக்குப் பிறகு உயிரோடு மீட்கப்பட்டவர்
மீட்புக் குழு ஆச்சரியம்

80 மணி நேரம் உயிர்வாழ்ந்தது எப்படி?நேபாள இளைஞர் கண்ணீர் பேட்டி



நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து உடல்களை மீட்டு வந்த மீட்புக் குழுவினருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் 80 மணி நேர போராட்டுத்துக்குப் பிறகு ஒருவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
28 வயதான ரிஷி கனல் என்ற இளைஞர் காத்மாண்டுவில் ஒரு கட்டட இடிபாடுகளுக்கு இடையே உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். அவர் மீட்கப்பட்ட அறையில் 3 உடல்கள் மீட்கப்பட்டன.
சனிக்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ரிஷி கனல் உணவோ, குடிநீரோ இன்றி 80 மணி நேரம் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு கால்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட நிலையில், தனது சிறுநீரைக் குடித்தே 80 மணி நேரம் உயிரோடு இருந்ததாகவும், தன்னை யாரேனும் நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டே இருந்த நிலையில், மெள்ள மெள்ள தனது நம்பிக்கை தகர்ந்து, நானும் விரைவில் உயிரிழந்துவிடுவேன் என்று நினைத்திருந்த நிலையில்தான் சிலர் எனது கூக்குரல் கேட்டு என்னை காப்பாற்றினார்கள் என்று கூறியுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, மன தைரியம் மட்டுமே அவரை காப்பாற்றியுள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top