முட்டாள்கள் தினத்தில்
அறிவுபூர்வமான
ஒரு வீடியோ
ஏப்ரல்
1ஆம் திகதியை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள்
அல்லவா? அன்றைய தினத்தில் மக்களிடம்
ஒரு நல்ல
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐஐடி
மாணவர்கள் ஒரு
வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ
சமூக வலைதளங்களில்
சக்கைப்போடு போட்டு வருகிறது.
அதாவது,
மாணவ, மாணவிகள்
அதிகம் நடமாடும்
பகுதிகளில் 100 ரூபாய் தாள்கள் மடித்துப் போடப்பட்டன.
அதனை பார்க்கும்
இளசுகள் அந்த
ரூபாயை எடுத்துப்
பிரித்துப் பார்த்தால், அங்கு அவர்களுக்கே அவர்களுக்காக
ஒரு நல்ல
தகவல் காத்திருந்தது.
அதாவது,
"இதே முயற்சிதான் பொது இடங்களில் இருக்கும் குப்பையை எடுக்கவும் தேவைப்படுகிறது" என்று
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
முட்டாள்கள்
தினத்தன்று மக்களை முட்டாளாக்குவதாக மட்டும் அல்லாமல், அவர்களை அறிவுப்பூர்வமாக
சிந்திக்கவும் வைத்துள்ளது இந்தியா மாணவர்கள்
குழு.
https://youtu.be/hM8fM43Bej0
0 comments:
Post a Comment