சாய்ந்தமருதுக்கான பெயர்ப் பலகை

(Nagoor Ariff ) June 21, 2014

இலங்கையில் எந்தப்பாகத்திற்குச் சென்றாலும், ஒவ்வொரு ஊரையும் குறுக்கறுத்துச் செல்லும் பிரதான வீதியில், அந்தந்த ஊரின் இருபக்கத் தொடக்கங்களிலும் குறித்த ஊரின் பெயர் தாங்கிய, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகைகள் இருப்பதைக் காணலாம்.
சின்னஞ்சிறிய ஊர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால், முப்பதினாயிரம் சனத்தொகையையும், தனியான பிரதேச செயலகத்தையும் கொண்ட சாய்ந்தமருது மட்டும் இதற்கு விதிவிலக்கோ என்னவோ. இதுவரை இந்த ஊருக்கு மட்டும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இன்னும் பெயரப்பலகைகளை இடுவதற்கு முடியவில்லை.
காரணம் . . . ?
இது சம்பந்தமாக கல்முனை பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரோடு கலந்துரையாடியதுடன், இது பற்றிய கடிதமொன்றை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பியுள்ளோம்.
இன்ஸா அல்லாஹ், இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் எந்தவொரு சகுனியும் குறுக்கிடாவிட்டால்!
*******************************************************************************
Ahamed Junaideen சாய்ந்தமருது ஊருக்கு மாளிகைக்காடு எல்லையிலும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பிரதான வீதி எல்லையிலும் கொங்கிறீட்டில் வடிவமைக்கப்பட்டதும்சாய்ந்தமருதுஎன தமிழ்,ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்பலகை பல்லாண்டு காலமாக இருந்து வந்தது Jowsi Abdul Jabbar என்பவருக்கு தெரிந்திருக்க வேண்டும். புதிய பெயர்பலகை எல்லைப்பிரச்சினை காரணமாக இனம்தெரியாத நாசகாரிகளால் நாசமாக்கப்பட்டதாக Jowsi Abdul Jabbar சொல்லியிருக்கிறீகளே அப்படியானால் ஸாஹிறாக் கல்லூரி எல்லையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்த கொங்கிறீட்டில் நடப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றியது யார்? காரைதீவில் இருந்து வந்தவர்களா? இதற்கான பதிலையும் Jowsi Abdul Jabbar அவர்களே நீங்கள் பெற்ற தகவல்களில் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு காலமாக மாளிகைக்காடு எல்லையில் வைக்கப்பட்டிருந்த கொங்கிறீட்டில் வடிவமைக்கப்பட்ட பெயர் பலகை இருந்து கொண்டுதானே இருந்தது அதில் எந்தப் பிரச்சினையும்அந்தக் காலத்தில் தோன்றவில்லையே? அது மாத்திரமல்லாமல் பாரிய அளவில் சாய்ந்தமருது எல்லையில் வரவேற்பு தோரணம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறதே அதில் பிரச்சினைகள் ஏற்படவில்லையா? வரவேற்பு தோரணம் அமைக்க முடியுமானால் ஏன் பெயர் பலகை ஒன்றை நடமுடியாது. பெயர்பல்கை நடுவதில் எல்லைதான் பிரச்சினையாக இருக்குமானால்அதனை அந்த ஊர் பள்ளிவாசல் முக்கியஸ்தர்களும் காரைதீவு முக்கியஸ்தர்களும் பேசி தீர்வு கண்டிருப்பார்கள். அந்த ஊர் மக்கள் பல பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர்கள். அவர்களிடம் இதுதான் பிரச்சினை என்றால் பிரச்சினையை ஒப்படைத்திருக்க வேண்டும்.அதனைவிடுத்து சாய்ந்தமருது மக்களை சுத்த கேனத்தனமானவர்கள் என்று கருதி கேனத்தனமாக இருக்கக் கூடாது. யாரோ என்ன காரணங்களை வைத்துக்கொண்டு கூறுகின்ற கேனத்தனமான பதில்களை அப்படியே படித்தவர்கள் கேனத்தனமாக கூறவும் முற்படக்கூடாது. பெயர் பலகை நடப்படல் வேண்டும் என்று கேட்பது அந்த ஊரில் பிறந்த மக்களுடைய உரிமை. அதனை கேனத்தனமாக பதில் கொடுப்பதன் மூலம் தடுக்க முடியாது. அப்படிப் பிரச்சினை இருந்தால் தீர்வு காணுவதுதான் அதிகாரிகளின் கடமையும் கூட. அதிகாரிகளும் கேனத்தனமாக இருக்கக் கூடாது.

Jowsi Abdul Jabbar Ahamed Junaidee நான் சரியாக அறிந்து விசாரித்துவிட்டுத்தான் எனது பதிவை இட்டிருக்கின்றேன் ! முதலில் ஒருவிடயத்தை நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும். இந்தப் பிரசிச்னை முழுக்க முழுக்க RDA சம்பந்தப்பட்டது! ஏற்கனவே இருந்த பெயர்ப்பலகையை அப்படியே விட்டிருந்தால் பிரச்சினை இல்லை ! ஆனால் எல்லா இடமும் ஒரே மாதிரியான பெயர்ப்பலகைகளை RDA தேசிய அளவில் இட்டுவருவதால் அவர்களே இவற்றை அகற்றியிருக்கிறார்கள் ! புதிதாக பெயர்ப்பலகை இடும்போது ஏற்பட்ட பிரச்சினைதான் நான் குறிப்பிட்டது ! தெற்கு எல்லையில் கல்முனை என்று பெயர்ப்பலகை இருக்கிறது . கட்டாயம் சாய்ந்தமருது எல்லையை அவ்விடத்தில் காட்டப்படல் வேண்டும் ! இவ்விடத்தில் ஏன் புதிதாக பெயர்ப்பலகை இடப்படவில்லை என்பதற்கான காரணம் புரியவில்லை ! ஒரு வேளை தெற்கு எல்லை காட்டப்படாதால் வடக்கு எல்லையையும் காட்டாமல் விட்டுவிட்டார்களோ தெரியவில்லை ! ஆனால் தெற்கு எல்லையில் பெயர்ப்பலகை இடப்பட்டு அகற்றப்பட்டதாகவே RDA Engineer குறிப்பிட்டார் ! அதற்கு மேலுள்ள லிங்கில் நான் குறிப்பிட்ட காரணத்தை அவர் குறிப்பிட்டார் ! மாளிகைக்காடு கிராமத்தை காட்டுவதற்கு பிரதான வீதியில் தூரம் குறைவாகக் காணப்பட்டதாகவும் அதனால் சாயந்தமருது பெயர்ப்பலகையை பள்ளிவாசல் சந்தியில் இட்டதாகவும் குறிப்பிட்டார் ! இது தொடர்பாக குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்த காலப்பகுதியில் சாய்ந்தமருது அபிவிருத்திக்குழு தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Nijamudeen Sihabdeen அவர்களுக்கு விடயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் ! அடுத்து வரும் சாய்ந்தமருது இணைப்புக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எட்டுக்கலாம்தானே! RDA இன் கிழக்கு மாகாண மேலதிக பணிப்பாளர் Eng.Nizar (இவர் சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்டவர் ) இவரிடமும் கதைத்து இதனை மேற்கொள்ளலாம்! பெயர்ப்பலகைகள் இடப்படாத பல ஊர்கள் கரையோரத்தில் உண்டு உதாரணம் ஒலுவில் /பாலமுனை ,மருதமுனை / பெரிய நீலாவணை ..இங்கெல்லாம் எல்லைப் பிரச்சினை உண்டு !!


Jowsi Abdul Jabbar இந்தப் பெயர்ப்பலகை பிரச்சினையை விட பெரிய பிரச்சினை ஒன்றுள்ளது உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை! அதுதான் கல்முனை மானகர சபையின் தெற்கு எல்லை, -து சாய்ந்தமருதுவின் தெற்கு எல்லை எங்கே உள்ளது என்று !! கல்முனை மானகர எல்லை வர்த்தமானி அறிவித்தல் படி காரைதீவு சந்திவரையுள்ளது . ஆனால் காரைதீவு பிரதேச சபையாக பிரிக்கப்பபோது வேறொரு எல்லை காட்டப்பட்டுள்ளது . அது தவிர சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லையும் வேறாகக் காணப்படுகின்றது ! ! கல்முனை Development Plan UDA இனால் தயாரிக்கப்படும் போது இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது ! ஆனால் அப்போதை மேயர் சிராஸ் அவர்களுக்கு இப்பிரச்சினையை விளங்கப்படுத்தி கல்முனை மானகர எல்லையை அதற்கான வர்ததமானி அறிவித்தல் படியே வரைபடத்தில் காட்டவேண்டும் என்று மிகுந்த பிரயத்தனத்தனம் எடுத்திருக்கிறேன் ! அதன்படிக்கு குறித்த திட்டத்தில் வரைபடம் 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபையாக பிரகடனப்படுத்தப்பட்டபோது குறிக்கப்பட்ட எல்லைகளின் படியே UDA திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது ! ( அப்போதிருந்த சாய்ந்தமருது கிராம சபையின் தெற்கு எல்லை ) கீழேயுள்ள படத்தில் காணலாம் ! .இவ்வளவு விடயங்களை நான் குறிப்பிடக்காரணம் ஒரு வேளை பெயர்ப்பலகை தொடர்பாக சம்பந்தப்படவர்கள் அதிகம் கரிசனை காட்டாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்! சகோதரர் உங்களிடம் எனது முந்தைப் பதிவிலிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்கு இன்பொக்ஸில் மன்னிப்புக் கோரியுள்ளேன் ! அவ்வாறு இடக்காரணம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்காமல் செய்தி வெளியிடுகிறார்களே என்கிற கவலையில்தான் !! மீண்டும் வேண்டுமென்றால் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்! பெயர்ப்பலகை இடுவது போலே இந்த தெற்கு எல்லைப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு காணப்படல் வேண்டும் என்பது எனது இன்னொரு அவா !


Jowsi Abdul Jabbar இங்கே நடந்த பெரிய தவறு என்ன வென்றால் சாய்ந்தமருது பிரதேச செயலகமாக பிரிக்கப்பட்டபோது எல்லை குறிப்பிடும் போது நகர சபை எல்லையையுடன் பரிசீலிக்காது விட்டுவிட்டார்கள் !

Ahamed Junaideen எல்லாம் அரசியலுக்காக அவசரப்பட்டு செய்வதுதான் காரணம். தென் கிழக்குப் பல்கலைக் கழகமும் அப்படித்தான் வர்த்தமானி அறிவித்தல் மூலமாகவே உருவாக்கப்பட்டது. குவைத் நிதியைப் பெற முயற்சிக்கும் போதுதான் அதற்கு திறைசேரியில் எந்தப் பதிவும் இருக்கவில்லையாம்? பின்னர் கடும் கஸ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் மன்சூர் தெரிவித்தார்.

Jowsi Abdul Jabbar Theoritical ஆக சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லை குறைத்து காட்டப்பட்டுள்ளதால் மானகர எல்லை குறைய வேண்டுமென்பதில்லை ! மானகர எல்லைக்குள் இன்னொரு பிரதேச செயலக எல்லை இருப்பதாகவே அது பொருள்படும் !!ஆனால் 2006 இல் காரைதீவு பிரதேச சபையாக பிரிக்கப்பட்டபோது அதன் எல்லையாக காரைதீவு பிரதேச செயலக எல்லையை குறிப்பிட்டுள்ளார்கள் . இது ஒரு பெரிய இடியப்பச்சிக்கலாகும் !! இதனை அவர்கள் அராய்ந்து தெரிந்துகொண்டே செய்துள்ளார்கள் !! ஏன் இவ்வாறு குறிப்பிடுகின்றேன் என்றால் மானகர கோவைகளை ஆராய்ந்தபோது 2002 களில் பாராளுமன்றத்தில் அப்போதைய திகாமடுல்ல எம்.பி ஒருவர் கல்முனை மானகர சபையாக தரமுயர்த்தப்படும்போது காரைதீவு எல்லைகள் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பி அதற்கான விளக்கம் அப்போதைய விசேட ஆணையாளர் மர்ஹூம் பழீல் சேர் அவர்களால் அளிக்கப்பட்டிருந்தது . அதில் அவர் 1987 கல்முனை பிர்தேச சபையாக ஆக்கப்பட்ட்போது வெளியிடப்பட்ட வர்த்தமானி எல்லைகள் தொடர்ந்து வருவதைக் குறிப்பிட்டிருந்தார்! கேள்வி எழுப்பியவர்கள் விடயம் அறிந்தவர்கள் 2006 ஆம் ஆண்டு கைவரிசையை காட்டியுள்ளனர் !!

Jowsi Abdul Jabbar என்னைப் பொறுத்தவரையில் RDA பெயர்ப்பலகை என்பது எல்லைகள் பறிபோகும் விடயத்தோடு ஒப்பிட்டால் அற்ப விடயம் . சாய்ந்தமருதைச் சேர்ந்த 2 பாராளுமன்ற உறுப்பினர் , RDA additional Provincial Director இருந்த காலத்தில்தான் ( 2007/2008 என்று நினைக்கிறேன் ) இந்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டன அப்போது .இந்த விட்யத்தை மிக இலகுவாகச் செய்திருக்கலாம் ! அப்போது இடம் பெற்ற இணைப்புக்குழுக் கூட்டங்களில் கூட யாரும் பெரிதாய் தூக்கிப் பிடிக்கவில்லை ! அடுத்ததாக 1987 இல் கல்முனை பிரதேச சபையாக உருவாக்கப்பட்டது தவறு என்பது எனது அபிப்பிராயம்! இருந்த 4 சபைகளையும் அப்படியே விட்டிருக்கலாம் !! இதனைச் சொல்வதற்கு நான் தயங்கமாட்டேன்.ஆனால் குறித்த காலகட்டத்தின் சூழ்னிலைகள் அவ்வாறு அமைந்த்ததா என்பது பற்றி எனக்குத்தெரியவில்லை! அவ்வாறு நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் செய்திருந்தால் அது தவறு என்பது எனது அபிப்பிராயம். பி.கு வரலாற்றை அதிகம் புரட்டிப் பார்க்காதீர்கள்அவ்வாறு பார்த்தால் கல்முனைக் குடிக்கும் சாய்ந்தமருதுக்குமிடையிலிருந்த தமிழ் சமுதாயம் எம்மிடம் கேள்விகேட்கும் !   எனவே ஒரு பிரச்சினைக்கு பல முகங்கள் உண்டு ,எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுகளை எடுக்காலமல் கடந்தகால வரலாறுகளை ஆராய்ந்து விட்டுக்கொடுப்புகளைச் செய்து யாரிலும் குறைகாண்பதாயின் வலுவான நியாயங்களோடு கண்டு செயற்பட்டால் எல்லாருக்கும் நன்மை உண்டு !!


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top