பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அமைச்சர்களான
பெளஸி. றிஷாத் பதியுதீன் ஆகியோரும் விஜயம
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 3 நாட்கள் உத்தியோகபூர்வப் பயணமாக
நேற்று 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் சென்றடைந்தார்.
இதுகுறித்து
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:
இஸ்லாமாபாத்
விமான நிலையத்தில்
இலங்கை ஜனாதிபதியை, பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ்
ஷெரீஃப், வரவேற்றார்.
பிரதமர் நவாஸ்
ஷெரிஃப், இலங்கை
ஜனாதிபதியுடன் இன்று 6 ஆம் திகதி திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ
பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அப்போது,
பாகிஸ்தானுக்கும்,
இலங்கைக்கும்
இடையே
வர்த்தகம்
உள்ளிட்ட
துறைகளில்
இருதரப்பு
ஒத்துழைப்பை
மேம்படுத்துவது
தொடர்பாக
ஒப்பந்தங்கள்
கையெழுத்தாக
உள்ளன.
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனை சந்திக்கும் இலங்கை
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவர் அளிக்கும்
விருந்திலும் பங்கேற்க உள்ளார் என்று அந்த
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை
மதியம், கராச்சி
விமான நிலையத்தில்
வந்திறங்கிய ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவை, சிந்து மாகாண
முதல்வர் சையது காயிம் அலி ஷா வரவேற்றார்.
ஜ்னாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஏ.எச்.எம்.பெளஸி,
றிஷாத் பதியுதீன் உட்பட அதிகாரிகள் பலரும் பாகிஸ்தான் பயணத்தில் இணைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment