அதிவிரைவு நெடுஞ்சாலை நடுவில் போதையில்
காருக்குள்  கிடந்த பெண்ணைக் காப்பாற்றி
கைது செய்த  பொலிஸார்
(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையின் நடுவே, நள்ளிரவு வேளையில் முழு குடி போதையில் மயங்கி கிடந்த நடுத்தர வயது பெண்ணை ரோந்து பணி பொலிஸார் கண்ணாடி ஜன்னலை உடைத்து காப்பாற்றிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சாண்டியாகோ நகரில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு வாகன ஓட்டி, சாலையின் நடுவே ஒரு பெண் முழு போதையில் மயங்கி கிடப்பதை கண்டார். பதறியடித்தபடி அந்த பெண்ணை காப்பாற்றும் நோக்கத்தில் ஓடிவந்த அவர் போட்ட கூச்சல் காரின் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி உள்ளே தூங்கிய அந்த பெண்ணின் காதுகளில் விழவில்லை.
இதனையடுத்து, அவ்வழியே சென்ற ரோந்து பொலிஸாடம் அவர் விபரத்தை கூற, அவர்கள் விரைந்து வந்து காரின் ஜன்னல் கண்ணாடியை தட்டி அந்த பெண்ணை எழுப்ப முயல்கின்றனர். லேசாக தூக்கம் கலைந்த அந்த பெண்ணின் கால், காரின்கிளட்ச்மீது பட்டு விடவே சரிவு வாட்டத்தில் இருந்த அந்த கார் லேசாக உருளத்தொடங்குகின்றது.
நிலைமை விபரீதம் அடைவதை உணர்ந்த ஒரு பொலிஸ்காரர், தனது கைத்துப்பாக்கியால் காரின் கண்ணாடியை உடைத்து அந்த பெண்ணை இழுத்து வெளியே போடுகிறார். பின்னர், அங்கு வந்து சேர்ந்த சக பொலிஸார், அந்த பெண்ணை கை விலங்கிட்டு அழைத்து செல்கின்றனர்.

தற்போது, இந்த வீடியோ இணையதளத்தில் பரபரப்பாக பரவிக்கொண்டிருக்கிறது.

https://youtu.be/uzOmt9OKU-w

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top