இன்று   மலை 7.30 மணிக்கு ஐபிஎல் தொடக்க விழா
வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் கொல்கத்தாவில் கோலாகலம்



8வது இந்தியன் பிரிமியர் லீக் (.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா இன்று நடைபெறுகின்றது. . கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த தொடக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்தியாவின் விழா என்ற பெயரில், 2 மணி நேரம் இந்த விழா நடக்கிறது. நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரின் கண்கவர் நடனம் இடம் பெறுகிறது. நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோரும் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர்.
இதில் முதல் முறையாக 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், .பி.எல். கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் தொடங்கி விட்டதாக அறிவிப்பார்இதனிடையே இன்று மாலை கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மழையால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சி யை தொடர்ந்து நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மொத்த பரிசு தொகை 34 ( இந்திய ரூபாயில்)  கோடியாகும்இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 15 கோடி வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு தி10கோடி கிடைக்கும். 3வது இடம் பிடிக்கும் அணிக்கு 5 கோடி ரூபாயும், 4வது இடம் பிடிக்கும் அணிக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்படும்இந்த பரிசு தொகையில் பாதியைஅணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று ஐபிஎல் விதிமுறை உள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top