உலகக் கிண்ணத் தொடரில் ஜொலித்து
ஐபிஎல் போட்டியில் இடம்பெறாதவர்கள்






கிரான்ட் எலியட்:
தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்த இவர், உலகக் கிண்ண அரையிறுதியில் முக்கியமான கட்டத்தில் 84 ஓட்டங்கள் சேர்த்தார். இக்கட்டான நேரத்தில் நங்கூரமாக நின்றதுடன், ஸ்டெயின் பந்தில் இமாலய சிக்ஸர் பறக்கவிட்டு, நியூஸிலாந்து முதல் முறையாக உலகக் கிண்ண இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கு காரணகர்த்தாவாகத் திகழ்ந்தார். இறுதி ஆட்டத்திலும் அவர் அரைசதம் அடித்தார்.



 மார்ட்டின் கப்டில்:
நியூஸிலாந்தைச் சேர்ந்த இவர்தான் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் (547) குவித்தவர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதியில் இரட்டைச் சதம் அடித்த இவர், ஐசிசி தேர்ந்தெடுத்த உலகக் கிண்ணக் கனவு அணியிலும் இடம்பெற்றிருந்தார். சிறந்த ஃபீல்டரான இவர் இல்லாமல் டி-20 அணியைத் தேர்வு செய்திட இயலாது.




குமார் சங்ககாரா:
உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்ததே, கிரிக்கெட் மீதான அவரது நேசத்துக்கு சான்று. ஆனாலும், அறிவித்தபடியே உலகக் கிண்ணப் போட்டி முடிந்ததும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது தேர்ந்த விக்கெட் கீப்பர் என்பதும் அவர் சார்ந்த அணிக்கு கூடுதல் பலம்.






ஷைமன் அன்வர்:
உலகக் கிண்ணத் தொடரில் கவனிக்கத்தக்க பேட்ஸ்மேனாக ஜொலித்தவர். ஒரு சதம் உள்பட 300 ஓட்டங்களுக்கும் மேல் அடித்த அவர், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து, ஐக்கிய அரபு அமீரக அணி கெளரவமான ஸ்கோரை எட்ட காரணமாகத் திகழ்ந்தார்.




ஜெரோம் டெய்லர்:
மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக (17) விக்கெட்டுகள் வீழ்த்திய இவரது பெயர், ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை. கடைசி ஓவர்களில் சரியான வேகத்துடன் நேர்த்தியாக பந்துவீசவல்ல திறமை படைத்த இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் எந்த அணியின் கண்ணிலும் படவில்லை என்பதுதான் ஆச்சரியம்.




ருபேல் ஹுசைன்:

உலகக் கிண்ணக் காலிறுதியில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து ஆர்ப்பரித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் இவர். துல்லியமான யார்க்கர், வேகத்துடன் வீசிய இவரது பந்துவீச்சு, இங்கிலாந்தை வெளியேற்ற ஒரு காரணமாக இருந்தது. ஹுசைன் இல்லாததால் ஐபிஎல் தொடரில் அது போன்றதொரு ஆக்ரோஷத்துக்கு வாய்ப்பில்லாமல் போனது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top