மலேசிய ஹெலிகொப்டர் வெடித்ததில்
மலேசிய முன்னாள் தூதுவர் ஜமாலுதீன் ஜர்ஜிஸ் உட்பட 6 பேர் பலி


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹெலிகொப்டர் வெடித்ததில் அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதுவர் ஜமாலுதீன் ஜர்ஜிஸ் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் நேரப்படி மாலை 4.55 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: வடக்கு கான்தன் நகரிலிருந்து செமினி நகர் அருகே வானில் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் திடீரென தீப்பற்றியதில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதுவர் ஜமாலுதீன் ஜர்ஜிஸ் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாண்டன் நகரில் நேற்று நடைபெற்ற மலேசியப் பிரதமர் மகளின் திருமணத்துக்கு சென்று திரும்பியபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பிரதமரது உதவியாளர் ஒருவரும் உள்ளார் என்று மலேசிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த முன்னாள் மலேசிய மந்திரியும், அமெரிக்க தூதருமான ஜமாலுதீன் ஜப்ரிஸ் உட்பட விமானத்தில் பயணித்த 6 பேரின் பிரேதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து, உடனடியாக விசாரணையை தொடங்குமாறு அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். தனது நீண்ட நாள் நண்பரான ஜமாலுதீன், உதவியாளர் அலியாஸ் உட்பட இந்த கோர விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
https://youtu.be/sM1l9oz2KqQ





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top